Latest News :

திரையரங்கை தொடர்ந்து ஒடிடி தளத்திலும் மாபெரும் வெற்றி பெற்ற ’யானை’!
Saturday August-27 2022

தமிழ் சினிமாவின் சமீபத்திய வெற்றிப் படமாகவும், வசூலை வாரிகுவித்த படமாகவும் அருண் விஜயின் ‘யானை’ திகழ்கிறது. கோலிவுட்டில் திரையரங்குகளில் வெளியான படங்களில் கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்குப் பிறகு வெற்றி பெற்ற படமாகவும், அனைத்து தரப்பினருக்கும் லாபம் கொடுத்த படமாகவும் ‘யானை’ படத்தை சொல்லி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், ஜீ5 ஒடிடி தளத்தில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியான ‘யானை’ திரைப்படம் குறிகிய நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, ஜீ5 தளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களின் வரிசையில் இணைந்துள்ளது.

 

பாசம், ஆக்சன், சென்டிமென்ட், காதல் மற்றும் குடும்பப் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இது தவிர, அருண் விஜய் மற்றும் நட்சத்திர நடிகர்களின் அசத்தலான நடிப்பு, ஜி.வி.பிரகாஷ் குமாரின் மனம் மயக்கும் இசையமைப்பு சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு இந்த படத்தினை வெகுவாக அழகுபடுத்தியுள்ளது.

 

படத்தின் வெற்றி குறித்து ஜீ5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில், “ஜீ5 இல், எங்கள் பார்வையாளர்கள் ரசிக்கும்படி அவர்களுக்கு விருப்பமான மொழியில் பிரபலமான படைப்புகளை வழங்குவதே எங்கள் நோக்கம். சிறந்த படைப்புகளை வழங்க வேண்டுமென்பதில் நாங்கள் முழுக்கவனத்தை செலுத்துகிறோம் என்று பெருமிதம் கொள்கிறோம்.  யானை ஒரு தனித்துவமான கமர்ஷியல் படம். குறுகிய காலத்திற்குள் இத்திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் வரவேற்பு எங்களுக்கு மிகுந்த  மகிழ்ச்சி தந்துள்ளது, மேலும் இந்த வெற்றி எங்கள் பார்வையாளர்களுக்கு நல்ல தரமான பொழுதுபோக்கை தொடர்ந்து வழங்க எங்களை  ஊக்குவித்துள்ளது.” என்றார்.

 

ஜீ5 தளம் ஏற்கனவே  சிறந்த உள்ளடக்கம் கொண்ட ஒரிஜினல் தொடர்கள், பிளாக்பஸ்டர்கள் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களின் பரவலான வரிசைகளை கொண்டுள்ளது.  தற்போது 'யானை' படத்தின் மாபெரும் வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளது. ஜீ5 மலிவு விலையில் சிறந்த உள்ளடக்கத்தை வழங்குவதில் அதன் நிபுணத்துவத்திற்காக குடும்ப பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், விலங்கு, ஆனந்தம், ஃபிங்கர்டிப் மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பேப்பர் ராக்கெட் என  பல்வேறு ஜானர்களில் அசல் தொடர்களை உருவாக்கி வழங்குவதில் தனது சிறந்த திறனை நிரூபித்துள்ளது.

 

‘யானை’யின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஜீ5 அதன் ஒரிஜினல் மற்றும் புதிய திரைப்படங்களின் அடுத்த வரிசைகளை விரைவில் வெளியிடவுள்ளது.

Related News

8468

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியானது!
Tuesday March-17 2026

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

Recent Gallery