இயக்குநர் பா.இரஞ்சித் கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘நட்சத்திரம் நகர்கிறது.’. யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன், சிந்துஜா விஜி, சபீர், சார்லர் வினோத், மனிஷா தத், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் காதல் எப்படி அரசியலாக்கப்படுகிறது என்பதை பேசுகிறது. மேலும், ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ள காதல் மட்டும் இன்றி ஓறினச்சேர்க்கை காதல் பற்றியும் இப்படம் பேசுகிறது.
வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். பா.இரஞ்சித்தின் படம் ஏ சான்றிதழ் வாங்கியிருப்பது இதுவே முதல் முறை என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் சிறப்பு காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டார்கள். படத்தை பார்த்தவர்கள் படத்தையும், இயக்குநர் பா.இரஞ்சித்தையும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
குறிப்பாக பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், இயக்குநர் பா.இரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார். மேலும், படம் குறித்து பல பிரபலங்கள் தொடர்ந்து பாராட்டி வருவதால், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படக்குழு உற்சாகமடைந்துள்ளது.

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...