Latest News :

17 சர்வதேசத் திரைப்பட விழா விருதுகளைக் குவித்த '21 கிராம்ஸ்' பைலட் பிலிம்!
Wednesday August-31 2022

இப்போது வருகிற எந்தப் படத்தைப் பார்த்தாலும் வெட்டு, குத்து, ரத்தம் என்று மனித உயிரை மலிவாகக் காட்டும் வகையில் காட்சிகள் வருவது சகஜமாகி வருகிறது.

இந்த நிலையில் உயிரின் விலை மதிப்பற்றது. மனிதன் ஒருவனின் உயிரை எடுக்க யாருக்கும் உரிமையோ அதிகாரமோ கிடையாது என்கிற கருத்தை வலியுறுத்தும் வகையில் வித்தியாசமான யாரும் சொல்லாத கோணத்தில் உருவாகியுள்ள படம் தான் '21 கிராம்ஸ்'.

 

 இந்தப் படத்தை யான் சசி இயக்கி உள்ளார். அவர் ஏற்கெனவே சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

 

இந்தப் படத்தில் கதாநாயகனாக மோகணேஷ் என்கிற அறிமுக நடிகர் நடித்துள்ளார். அண்மையில் காலமான குணச்சித்திர நடிகர் பூ ராமு ஓர் அழுத்தமான கதாபாத்திரத்தின் மூலம் இந்த படத்தில் நடித்து, படம் பார்ப்பவர்கள் மனதில் நிறைகிறார்.

 

இப்படத்திற்கு  சௌந்தர்ராஜன், அன்பு டென்னிஸ் என்கிற இருவர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த இருவருக்கும் சில படங்களிலும் இணைய தொடர்களிலும் விளம்பரப் படங்களிலும் பணியாற்றிய அனுபவம் உண்டு.

 

இப்படத்திற்கு இசையமைத்துள்ள விஜய் சித்தார்த், ராக்கி புகழ்  நடிகர் வசந்த் ரவி நடித்துள்ள புதிய படத்திற்கு இசையமைத்து வருகிறார். அந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

 

இந்தப் படம் பற்றிய அனுபவத்தை இயக்குநர் யான் சசி கூறுகையில், “முழு நீளத்திரைப்படம் இயக்குவது தான் எனது கனவு . அப்படி நான் ஒரு படத்திற்காகப் பேசி ஒரு பெரிய  நிறுவனத்தால் எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.படம் துவங்க வேண்டிய நேரத்தில் கொரோனா காலம் வந்து விட்டது. தாமதமாகிக் கொண்டே வந்தது. இடையில் ஏதாவது செய்யலாம் என்று ஒரு சிறு முயற்சியாக 15 நிமிடத்தில் ஓடக்கூடிய ஒரு பைலட் பிலிம்  போல் இதை உருவாக்குவது எனத் திட்டமிட்டேன். ஆனால் அதன் கதை வளர்ந்து விரிவாகி, அந்தக் கதை தானே பெருக்கிக் கொண்டு ஒரு முழு நீளப் படமாக  52 நிமிடங்களில் ஓடக்கூடிய படமாக உருமாறி உருவாகியுள்ளது.

 

நான் எடுத்துக்கொண்ட கதை அதன் வீரியத்தால் பல பிரச்சினைகளைத் தாண்டி முழுப் படமாக வடிவம் பெற்று இன்று பார்த்தவர்கள் எல்லாம் பாராட்டுகிறார்கள். அதைப் திரையிட்டுக் காட்டிய போது அனைவரும் இப்படிக் கூட இதைச் சொல்ல முடியுமா என்று வியந்து பாராட்டினார்கள். திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிய போது பல இடங்களில்  விருதுகளைப் பெற்றுள்ளது.

 

21 Grams

 

கல்கட்டா சர்வதேச கல்ட்டு திரைப்பட விழாவில் இப்படத்திற்கு சிறந்த படம், சிறந்த  நடிகர் , சிறந்த இயக்குனர்,சிறந்த ஒளிப்பதிவு என மொத்தம் நான்கு விருதுகளைப் பெற்றது. அந்தத் திரைப்பட விழாவில் தான் விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்திற்கும் விருதுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது .

 

அதேபோல தாகூர் சர்வதேச திரைப்பட விழா, சிங்கப்பூர் திரைப்பட விழா, டோக்கியோ, இத்தாலி ரோம்,அமெரிக்கன் கோல்டன் பிக்சர்ஸ் திரைப்பட விழாக்கள் என்று சர்வதேச திரைப்பட விழாக்களில்  இதுவரை 17 விருதுகள் இந்த படத்திற்கு கிடைத்திருக்கின்றன. 52 நிமிடங்களில் ஒரு முழு படத்திற்கான  திருப்தியை இப்படம் பார்வையாளர்களுக்கு வழங்கும் வகையில் இது உருவாகி உள்ளது.

 

இப்படத்தில் அறிமுகம் ஆகியுள்ள கதாநாயகனுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது .இந்தப் படத்தில் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ள பூ ராமு அவர்களின் நடிப்பும் பேசப்படும் .

 

நாங்கள் ஒரு புது படக் குழுவாக இருந்தாலும் கதையையும் இந்த முயற்சியையும் ஊக்கப்படுத்தும் வகையில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களுக்கு அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது .அவரது இறப்பு எங்களைப் போல வளரும் இளம் இயக்குனர்களுக்கு பெரிய இழப்புதான்.

 

படத்தை முடித்து திரையிட்டுக் காட்டிய போது பலரும் கொடுத்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் எங்களுக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்தன. திரையிடப்படும் திரைப்பட விழாக்களில் கிடைத்து வரும் விருதுகளும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை எனக்கு அளித்து வருகிறது.” என்றார்.

Related News

8477

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery