விஜய் ரசிகர்கள் மட்டும் இன்றி உலக தமிழர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் விஜயின் ‘மெர்சல்’ பல பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது படமே ரிலிஸாகுமா? என்ற கேள்வியை எழுப்பும் அளவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
‘மெர்சல்’ என்ற தலைப்பு பிரச்சினை முடிந்த நிலையில், தீபாவளிக்கு ‘மெர்சல்’ ரிலிஸ் உறுதி என்று தயாரிப்பு தரப்பு அறிவித்ததால், விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்த நிலையில், தீபாவளி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்கங்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், அன்றைய தினம் ‘மெர்சல்’ ரிலிஸாகது என்று கூறப்படுகிறது.
தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐநாக்ஸ் மற்றும் பி.வி.ஆர் போன்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் இன்று முதல் மூடப்பட்ட நிலையில், பிற திரையரங்கங்களின் உரிமையாளர்கள் தீபாவளி முதல் திரையரங்கங்களை மூடி தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, விஜயின் ‘மெர்சல்’ படம் ரிலிஸாவதில் மிக்கப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...