‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ‘கோ’ ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களை தொடர்ந்து உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனங்கள் ‘விடுதலை’ படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது.
விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள ’விடுதலை’ இறுதிக்கட்டத்தை எட்டி, பரபரப்பாக தயாராகி வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
பிரமாண்டமாக உருவாகியுள்ள விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படம் ரசிகர்களிடமும், திரையுலகினரிடமும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இப்படத்தில் இணைந்திருப்பதால் எதிர்ப்பார்ப்பு அதிகமாகியிருப்பதோடு, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடம் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவதால், விடுதலை படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...