அறிமுக இயக்குநர் பி.சதீஷ் குமரன் இயக்கத்தில், சூர்யா இந்திரஜித் பிலிம்ஸ் சார்பில் திரவியம் பாலா தயாரிக்கும் படம் ‘பெண்டுலம்’.
புதுமையான சைக்காலாஜிக்கல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் அம்மு அபிராமி, கோமல் ஷர்மா, ஸ்ரீபதி, ஸ்ரீகுமார், டி.எஸ்.கே, விஜித், ராம், ராம் ஜூனியர் எம்.ஜிஆர், பிரேம்குமார். கஜராஜ், சாம்ஸ் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு படத்தில் எட்டு பேர் முதன்மை கதாப்பாத்திரமாக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
20 ஆண்டுகளாக கேமரா பின்னணியிலும், ஒளிப்பதிவாளராக பல உலக விருதுகளை குவித்திட்ட குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணிபுரிந்திட்ட பி.சதீஸ் குமரன் இப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் ஷங்கரின் ’ஐ’ படத்தில் மேக்கிங் கேமராமேனாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.
தமிழ் சினிமாவில் சைக்கலாஜிகல் படங்கள் அரிது அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத புதுமையான திரைக்கதையில், சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.
சென்னை, தலக்கோணம், ஆந்திரா கர்னூல் மாவட்டம் மற்றும் கோவா முதலாக இதுவரை படப்பிடிப்பு நடத்தப்படாத இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
சைமன் கிங் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார். ராம் சதீஷ் படத்தொகுப்பு செய்ய, கே.பி.நந்து விஜித் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். விவேகா, கு.கார்த்திக் பாடல்கள் எழுதுகிறார்கள். டான் அசோக் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, ராஜேஷ்.ஜே நடன காட்சிகளை வடிவமைக்கிறார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...