Latest News :

’கேப்டன்’ தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக இருக்கும் - நடிகர் ஆர்யா
Saturday September-03 2022

‘டெடி’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் ‘கேப்டன்’ படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் நிறுவனத்துடன் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

வித்தியாசமான முயற்சியாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, ரசிகர்களிடம் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட இருப்பதாலும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

‘கேப்டன்’ படம் குறித்து கூறிய நடிகர் ஆர்யா, “இந்த படத்தின் கதையை இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் முழுமையாக சொல்லவில்லை. இப்படி ஒரு ஐடியா இருப்பதாக சொன்னார். இதை உன்னால் செய்ய முடியுமா? எவ்வளவு நாட்கள் ஆகும்?, கிராபிக்ஸ் தரமாக இருக்குமா? போன்ற கேள்விகளை கேட்டேன். கிராபிக்ஸ் சூப்பர் வைசரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்றார். பிறகு இதை எப்படி செய்யப்போகிறோம் என்பதை விவரித்தார். நான் உடனே நடிக்க சம்மதித்து விட்டேன். எனக்கு சக்தி மீது இருக்கும் நம்பிக்கையில் தான் ஒப்புக்கொண்டேன். படமும் மிக சிறப்பாக வந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக ‘கேப்டன்’ படம் இருக்கும்.

 

இந்த படத்தில் வரும் கொடூரமான பிராணியை முழுக்க முழுக்க கிராபிக்ஸில் வடிவமைத்திருக்கிறோம். அதன் கிராபிக்ஸ் காட்சிகள் தரமாக இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு நிகராக கிராபிக்ஸ் காட்சிகள் வந்திருக்கிறது. அதேபோல், வெறும் அந்த கொடூர பிராணியை மட்டுமே வைத்து படம் எடுக்கவில்லை. அதன் பின்னணியாக அழுத்தமான ஒரு கதை இருக்கிறது. டெடி படத்தில் எப்படி அதன் பின்னணியில் செண்டிமெண்ட் இருந்ததோ அதுபோல் இதிலும் அழுத்தமான ஒரு கதை இருக்கும். அனைத்து காட்சிகளுக்கும் ஒரு காரணம் இருக்கும்.

 

Captain

 

என்னுடன் இணைந்து நடித்துள்ள ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ஏதோ ஒரு கதாப்பாத்திரமாக இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்திருக்கிறார்கள். கதாப்பாத்திரத்திற்காக அதிகம் மெனக்கெட்டு இருக்கிறார்கள். ராணுவ வீரராக நடித்திருப்பதால், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரிடம் இருந்து பல தகவல்களை பெற்று பணியாற்றியுள்ளோம். குறிப்பாக இந்திய ராணுவ வீரர்களுக்கு சீருடை தைக்கும் டெய்லரிடம் தான் எங்களுடைய சீருடையும் தைக்கப்பட்டது. சிறு சிறு விஷயங்கள் கூட சரியாக இருக்க வேண்டும் என்று இதை செய்தோம். 

 

‘கேப்டன்’ வித்தியாசமான முயற்சி என்பதை விட புதிய அனுபவமாக இருந்தது. ரசிகர்களுக்கும் இந்த படம் புதிய அனுபவமாக இருக்கும். நிச்சயம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த படமாக இருக்கும். பான் இந்தியா படத்திற்கான அனைத்து அம்சங்களும் படத்தில் இருந்தாலும், இப்போதைக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் மட்டும் வெளியிடலாம் என்று முடிவு செய்தோம். ” என்றார்.

 

இயக்குநர் சக்தி செளந்தர் ராஜா பேசுகையில், “என் படங்கள் வெளியாகி ஒருவாரத்திற்கு பிறகு, எப்படி இந்த படத்தை எடுத்தோம், எப்படி எழுதினோம் என்று நான் யோசிப்பேன். ‘டிக் டிக் டிக்’, ‘டெடி’ படங்கள் எல்லாம் அதுபோல தான். டெடி படத்தில் தலைமை மட்டும் கிராபிக்ஸ் செய்தோம். அப்போது தான் எனக்கு இந்த ஐடியா வந்தது. இதை செய்ய முடியுமா? என்று கிராபிக்ஸ் சூப்பர் வைசரிடம் கேட்டேன். அவர் செய்யலாம் என்று சொன்னதும் இந்த கதையை எழுதிவிட்டேன். படத்தில் வரும் அந்த கொடிய மிருகம் முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் வடிவமைக்கப்பட்டது. அது ஏலியன் என்று நாங்கள் சொல்லவில்லை. படத்திலும் அப்படி குறிப்பிடவில்லை. ஒரு கொடிய மிருகம். அது ஏன் அங்கு வந்தது, என்ற பின்னணியில் கதை இருக்கும்.

 

கொடிய மிருகம் அதை அழிக்கும் ராணுவ வீரர்கள் என்று மட்டும் கதை இருக்காது, முழுக்க முழுக்க ஒரு ராணுவ ஆக்‌ஷன் படம் என்ற ரீதியில் தான் கதை இருக்கும். பொதுவாக ராணுவத்தை பற்றி படம் எடுத்தால், வேறு ஒரு நாட்டுடன் சண்டை என்பது போல் தான் கதை எழுதுவார்கள். ஆனால், அதையே நாம் செய்யாமல் வித்தியாசமாக செய்யலாம் என்று யோசித்து தான் அந்த கொடிய மிருகம் என்ற கான்சப்ட்டை வைத்தேன். அந்த மிருகத்தின் பின்னணியில் சொல்லப்படும் கதை ரொம்பவே இண்டர்ஸ்டிங்காக இருக்கும். அதேபோல் அந்த உருவத்தின் கிராபிக்ஸ் காட்சிகளும் மிக சிறப்பாக வந்திருக்கிறது. அந்த கிராபிக்ஸ் காட்சிகளை வெளிநாட்டில் செய்தோமா, என்று கேட்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க சாலிகிராமத்தில் உருவான படம் என்று நான் சொல்வேன். அனைத்து வேலைகளும் சாலிகிராமத்தில் தான் நடந்தது.

 

Director Shakthi Soundar Rajan

 

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக கிராபிக்ஸ் காட்சிகள் வந்திருக்கிறது. அதற்காக கிராபிக்ஸ் காட்சிகளை மட்டுமே நம்பி இந்த படத்தை எடுக்கவில்லை. அதை தாண்டி படத்தில் பல விஷயங்கள் இருக்கிறது. குறிப்பாக ராணுவத்தை காட்டிய விதம். சாதாரணமாக சொல்லாமல், ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து சொல்லியிருக்கிறோம். நிச்சயம் ரசிகர்களை படம் கவரும்.” என்றார்.

Related News

8484

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery