Latest News :

’சினம்’ படத்தின் வெளியீட்டுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அருண் விஜய்
Monday September-05 2022

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் ‘சினம்’ வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து படத்தின் புரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நடிகர் அருண் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களை சந்தித்தனர். இந்த பயணத்தின் போது வழியெங்கும் ரசிகர்கள் தந்த வரவேற்பிலும், பேரன்பிலும் மிதந்த அருண் விஜய் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். 

 

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கும்பகோணம், கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் (ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 & செப்டம்பர் 2, 2022) நடந்த இந்த பயணம்  வெற்றிகரமாக முடிவடைந்ததது. இந்த நகரங்களில் உள்ள திரையரங்குகளுக்கு நடிகர்கள் வருகை தந்தது ரசிகர்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆர்பரித்த கூட்டத்தின் நடுவே ரசிகர்களிடம் அன்போடு பழகிய  அருண் விஜய் குணம்  அனைவரையும் கவர்ந்தது. 

 

Sinam

 

அருண் விஜயின் இந்த சுற்றுப்பயணம் மூலம் ‘சினம்’ படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அருண் விஜய் ரசிகர்களுக்கான விருந்தாக படம் இருப்பதோடு, குடும்ப பார்வையாளர்களும்  ரசிக்கும்படியான அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. மனதைக் கவரும் பாடல்களும்,  ரசிகர்களை மயக்கும் டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளன.

 

மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடேட் சார்பில் ஆர்.விஜயகுமார் தயாரித்துள்ள இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வானி நடித்திருக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், ஆர்.என்.ஆர்.மனோகர், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

Sinam

 

ஷபீர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். மைக்கேல் கலையை நிர்மாணிக்க, ஏ.ராஜாமுகமது படத்தொகுப்பு செய்துள்ளார். கதை மற்றும் வசனத்தை ஆர்.சரவணன் எழுத, மதன் கார்கி, ஏக்நாத், பிரியன், தமிழனங்கு ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

Related News

8490

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியானது!
Tuesday March-17 2026

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

Recent Gallery