Latest News :

’சேத்துமான்’ இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ‘உறியடி’ விஜய்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது
Monday September-05 2022

‘உறியடி’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான விஜய்குமார், ஒடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற ‘சேத்துமான்’ படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து 62 நாட்கள் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

 

காதல், அரசியல், ஆக்‌ஷன் கலந்த ஜனரஞ்சகமான குடும்ப திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆதித்யா தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய்குமாரை வைத்து ஒரு படத்தை தயாரித்துள்ள நிலையில், இரண்டாவது படமாக இப்படத்தை தயாரித்து வருகிறார்.

 

கதாநாயகனாக விஜய்குமார் நடிக்க நாயகிகளாக ’அயோத்தி’ படத்தில் நடிக்கும் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் அறிமுக நடிகையான ரிச்சா ஜோஷி நடிக்கிறார்கள். இவர்களோடு முக்கிய கதாப்பாத்திரத்தில் ‘வத்திக்குச்சி’ திலீபன், ’கைதி’ ஜார்ஜ் மரியான்,  ’வடசென்னை’ பாவல்  நவகீதன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.  

 

கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். எழுத்தாளர் அழகிய பெரியவன், விஜய்குமார், தமிழ் ஆகிய மூவரும் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பு செய்ய, ஏழுமலை ஆதிகேசவன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஸ்டன்னர் சாம் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க ஸ்ரீகிரிஷ் மற்றும் ராதிகா நடனம் அமைத்துள்ளனர்.

 

ஒரே கட்டமாக முழு படப்பிடிப்பையும் முடித்திருக்கும் படக்குழுவினர் விரைவில் படத்தின் பின்னணி வேலைகளை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

Related News

8493

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியானது!
Tuesday March-17 2026

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

Recent Gallery