Latest News :

’ஈடாட்டம்’ படம் மூலம் ஹீரோவான ஸ்ரீ! - ஜோடியான மூன்று நாயகிகள்
Tuesday September-06 2022

’சின்னா’, விஜயின் ‘தெறி’, கமலின் ‘விக்ரம்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீ, பல வெற்றி தொலைக்காட்சி தொடர்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட பல தொடர்கள் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் அறியப்பட்ட நடிகர் ஸ்ரீ ‘ஈடாட்டம்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். 

 

ஈசன் மூவிஸ் சார்பில் சக்தி அருண் கேசவன் தயாரிக்கும் இப்படத்தின் கதை எழுதி ஈசன் இயக்கியிருக்கிறார்.

 

ஸ்ரீ ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் வெண்பா, அணுகிருஷ்ணா, தீக்‌ஷிகா ஆகிய மூன்று பேர் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ராஜா, விஜய் விசித்திரன், காதல் சுகுமார், பவர் ஸ்டார், பூவிலங்கு மோகன், விஜய் சத்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

 

வறுமையில் வாழும் ஒருவர் பணத்தேவைக்காக தவறான முடிவுகளை எடுக்கிறார். அதனால், அவர் மட்டும் இன்றி அவரை சார்ந்தவர்களும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்ற மெசஜை காதல், காமெடி, செண்டிமெண்ட் என கமர்ஷியலாக சொல்வது தான் இப்படத்தின் கதை.

 

யோகி பாபு, நடன இயக்குநர் தினேஷ் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருக்கும் ‘லோக்கல் சரக்கு’ படத்திற்கு இசையமைத்திருக்கும் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘லோக்கல் சரக்கு’ படத்தின் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பை போல், ‘ஈடாட்டம்’ படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

கஜபதி வசனம், திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சென் முத்துராஜ் படத்தொகுப்பு செய்கிறார். கலை செந்தில், ராதிகா நடனம் அமைக்க, ஹார்ஸ் சுரேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். வணக்கம் ராஜா தயாரிப்பு மேற்பார்வையாளரா பணியாற்றுகிறார்.

 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதோடு, படத்தின் மீதும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

திருச்செந்தூர், பாண்டிச்சேரி, சென்னை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

Related News

8497

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery