கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ‘விழித்திரு’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற டி.ராஜேந்தர், அதே மேடையில் பேசிய தன்ஷிகா தனது பெயரை குறிப்பிடவில்லை என்பதற்காக, அவருக்கு நாகரீகம் தெரியவில்லை என்று கூறியதோடு, மேடையில் அவரை அவமானப்படுத்தும் வகையில் சில நிமிடங்கள் பேசினார்.
தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் அதை ஏற்காத டி.ஆர்-வாய்க்கு வந்ததை எல்லாம் பேசியதால், ஒரு கட்டத்தில் தன்ஷிகா மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து முதலில் நம் இணையதளம் செய்தி வெளியிட்டது. இதன் பிறகு மற்ற இணையதளங்களிலும் இந்த செய்தி வெளியாக, சமூக வலைதளங்கள் முழுவதிலும், இந்த விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து நடிகர் சங்க செயலாளர் விஷால், தன்ஷிகாவுக்கு ஆதாரவாக டி.ஆர்-க்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அன்றைய நிகழ்வில் இருந்த வெங்கட் பிரபு, விதார்த், கிருஷ்ணா ஆகியோரும் தங்களது விளக்கத்தை அளித்து, டி.ஆர் மீது தான் தவறு என்று கூறியிருந்தார்கள்.
இந்த சம்பவத்திற்கு பிறகு எந்த நிகழ்விலும் கலந்துக்கொள்ளாமல், மவுனம் காத்து வந்த தன்ஷிகா, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இனிமேல் நான் தனி ஆள் கிடையாது. எனக்கு எல்லோரும் உள்ளார்கள். எல்லோருடைய கருத்துகளையும் வாசிப்பதனால் நான் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளேன், என்று தெரிவித்துள்ளார்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...