பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ’வெண்கடல்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘கைதிகள்’ சிறுகதையை தழுவி திரைப்படம் ஒன்று உருவாகிறது. ரஃபீக் இஸ்மாயில் இயக்கும் இந்த படத்தை டர்மெரிக் மீடியா மற்றும் அஹா தமிழ் ஓடிடி தளம் இணைந்து தயாரிக்கின்றன.
சிறந்த இலக்கியப் படைப்புகள் வெற்றிகரமான திரைப்படங்களாகவும், ரசனைக்கும் ஏற்றவாறு அமைய வேண்டும் என்பதற்காக ஜெயமோகன் அவர்களின் மூலக்கதைக்கு ஈடுகொடுக்கக்கூடிய மிகச்சிறந்த திரைக்கதையாக வடிவமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
டர்மெரிக் மீடியா சார்பில் இப்படத்தை தயாரிக்கும் அனிதா மகேந்திரன் படம் குறித்து கூறுகையில், “அனைத்து தரப்பு மக்களை மகிழ்விக்கும் வகையில் பல புதிய நிகழ்ச்சிகள்,வெப் சீரிஸ்கள் மற்றும் படங்களை வழங்கும் ஆஹா தமிழ் ஓடிடி, 2 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டு முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக உள்ளது.அந்நிறுவனத்தின் அமைப்பாளரும் தெலுங்கு திரைப்படத்துறை மூத்த தயாரிப்பாளருமான திரு.அல்லு அரவிந்த் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.டர்மெரிக் மீடியா படைப்பூக்கத்தை தரமான, வெற்றிகரமான திரைப்படமாக மாற்ற முடியுமென்பதில் சமரசமற்ற நம்பிக்கை கொண்டிருக்கிறது. இந்தப் படமும் ரசிகர்களை மகிழ்விக்கும் படமாக அமையுமென்பதில் உறுதியாக இருக்கிறோம்.” என்றார்.
இப்படம் குறித்து அஹா ஒடிடி தளத்தின் தலைமை நிர்வாகி அஜித் தாக்கூர் கூறுகையில், “மிக நேர்த்தியான கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள், உறுதியாக பார்வையாளர்களின் உள்ளத்தை சென்றடையும், இக்கோட்பாடை உண்மையாக்கும் வகையில் செயல்பட்டுவரும் தயாரிப்பு நிறுவனமான டர்மெரிக் மீடியா உடன் கரம் கோர்ப்பதில் நாங்கள் பெருமிதம்கொள்கிறோம். மேலும் சிறப்புமிக்க தனித்தன்மை வாய்ந்த திரைப்படங்கள் தயாரிப்பதை தங்கள் பாணியாக கொண்ட டர்மெரிக் மீடியாவும் நாங்களும் சேர்ந்தது, மிகச்சிறந்த எழுத்தாளரான திரு. ஜெயமோகன் அவர்களுடைய படைப்பை தழுவிய திரைப்படத்தை, ஆஹா ஓடிடி ஒரிஜினலில் வெளியிட நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இத்திரைப்படம் ஆஹா ஒடிடி நேயர்களுக்கு ஒரு மிக தரமான படமாக அமையும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்றார்.
இப்படத்தின் தலைப்பு, நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட முழு விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...