Latest News :

இது சாத்தியமானதற்கு முக்கிய காரணம் லைகா சுபாஸ்கரன் தான்! - கார்த்தி நெகிழ்ச்சி
Thursday September-08 2022

சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, தள்ளி போன பொன்னியின் செல்வன் படம் இன்று சாத்தியமானதற்கு முக்கிய காரணம் சுபாஷ்கரன் சார் தான், என்று நெகிழ்ச்சியாக பேசினார்.

 

நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய கார்த்தி, “நான் இங்கு நிற்பதற்கு காரணமாக இருக்கும் ரசிகர்கள் எல்லோருக்கும் நன்றி. இந்த படம் சாதாரண படமல்ல 70 வருட கனவு. வரலாற்று புனை கதை என்றால் என்ன? இரண்டு உண்மை சம்பவங்களுக்கு இடையில் இருப்பதை புனையப்பட்டு எழுதுவதுதான் வரலாற்று புனை கதை. உதாரணமாக, மிகப் பெரிய கோவிலை கட்டியவர் ராஜராஜ சோழன். இது உண்மை. ஆனால், அதை கட்டுவதற்கு எப்படி கட்டினார் என்பதே அவரை அதில் பொறித்து வைத்திருக்கிறார். ஆனால், நாம் கற்பனையாக கூறும்போது, அடிமைகளை வைத்துக் கட்டினார்கள், ஏலியன்களை வைத்துக் கட்டினார்கள் என்று நம் கற்பனைக்குத் தகுந்தவாறு எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். அப்படித்தான் கல்கியும் இந்த கதையை எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன். 

 

இப்படம் வீரம், துரோகம், அன்பு, ஆன்மீகம், அரசியல் அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த கதையை படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்தந்த கதாபாத்திரங்களுடன் வாழ்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு கதையை திரையில் கொண்டு வருவது சாதாரண விஷயம் அல்ல. அது உயர் மின்னழுத்த கம்பி போன்றது. தொட்டால் ஷாக் அடிக்கும். பயந்து பயந்து தான் தொட வேண்டும். ஆனால், அது தொடுவதற்கான ஆற்றலும், தைரியமும் தமிழ் பற்று வரும் போது, சினிமா மீது காதல் வரும் போது வருகிறது.

 

40 வருடங்களாக மணி சார் இப்படத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறார். 80களில் உள்ள கமல் சாரின் பேட்டி ஒன்று இப்போது கிடைத்தது. எண்பதுகளில் நான் இந்த படத்தை தயாரிக்க ஆசைப்படுகிறேன் என்று அவர் கூறியிருந்தார். நீங்கள் மிச்சம் வைத்ததற்கு நன்றி சார். இந்த படத்தையும் நீங்களே செய்திருந்தால் நாங்கள் என்ன செய்வது?

 

40 வருடங்களில் பல முறை மணி சார் முயற்சி எடுத்தும் இப்படம் தள்ளிப் போய்க் கொண்டே வந்தது. ஆனால், இப்போது அனைத்தையும் வரிசைப்படுத்தினால் நாங்களும் மலேசியா சென்றோம். கமல் சார் கூறியதைப்போல எங்களை மொத்தமாக புல்டோசர் வைத்து ஏற்றிவிட்டார். இந்தப் படம் எடுத்ததே ஒரு விஸ்வரூப வெற்றி. அதற்கே முதலில் மணி சாரை பாராட்ட வேண்டும். இந்த மூன்று தலைமுறை கதைகளை கூறுவதற்கும் அவ்வளவு பொறுமை தேவைப்படும். அத்தனை கலைஞர்கள் தேவைப்படுவார்கள். மணி சார் 5 குதிரை வேகத்தில் பணியாற்றுகிறார். பணியாற்றுவதை பார்ப்பதற்கு ஆசையாக இருக்கிறது. அவர் கூட இருந்தாலே போதும் என்று தோன்றுகிறது.

 

தோட்டாதரணி மாதிரி அனுபவம் வாய்ந்த, விஷயமறிந்த ஆட்கள் கிடைப்பார்களா என்பது தெரியவில்லை. இந்த தலைமுறையில் பிறந்ததற்கு பெருமைபடுகிறோம். அதை விட இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மிகப் பெருமையாக இருக்கிறது.

 

என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி அவர் ஒவ்வொன்றாக விவரித்த விதம் ரொம்ப அழகாக இருந்தது. வந்திய தேவன் ஒரு பெண்ணிடம் எப்படி பேசுவான், அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், ஒவ்வொரு காட்சிகளையும் தெளிவாக குறித்து வைத்திருப்பார். நான் என்னதான் புத்தகதை பலமுறை படித்தாலும் அங்கு போய் நிற்கும் போது மணி சார் அதை எப்படி வடிவமைத்திருக்கிறார் என்றுதான் பார்க்க தோன்றும். மேக்கப் கலைஞர்கள் இப்படத்திற்காக பிரத்யேகமாகவும் திறமையாகவும் பணியாற்றியிருக்கிறார்கள். சரத்குமார் சாரை அடையாளமே தெரியவில்லை. ஆயிரம் பேர் இப்படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டார். அவர் கதாபாத்திரத்திற்கு அவர் குண்டாக வேண்டும் தொப்பை வயிறு வேண்டும் என்பதற்காக தினமும் அதிக அளவில் உணவு உண்டு எடையைக் கூட்டினார். இப்படத்தின் மூலம் ஜெயம் ரவி எதிர்காலத்தைப் பற்றி பேசக்கூடிய சிறந்த நண்பனாக கிடைத்திருக்கிறார்.

 

தள்ளி தள்ளி போய்க் கொண்டிருந்த இப்படம் இன்று சாத்தியமாக முக்கிய காரணமாக இருந்தது லைகா சுபாஷ்கரன் சார் தான். அவருக்கு ரொம்ப நன்றி.

 

இப்படத்தில் நடித்த அனைத்து பெண்களும் கடின உழைப்பாளிகள். என்னுடைய ஜீனியூஸ் மனிதரைப் பற்றி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் இங்குதான் நான் நேரில் பார்த்தேன். பள்ளிக்கூடத்தில் வீட்டுப்பாடம் செய்வது போல ஆளுக்கு ஒரு நோட்டை வைத்துக்கொண்டு படித்துக் கொண்டிருந்தார்கள். நான் உதவி இயக்குனராக இருந்த போது திரிஷாவிற்கு பைக் ஓட்ட கற்றுக் கொடுத்தேன். இந்த படத்தில் அவருடன் முதல் முதலில் பணியாற்றுவதில் சந்தோஷமாக இருக்கிறது. ஷோபிதா உடன் பணியாற்றியதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் அடுத்தடுத்த மேடைகளில் நிறைய பேசுகிறேன்.” என்றார்.

Related News

8503

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery