ஜி.என்.ஆர்.குமரவேல் இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் ’சினம்’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அருண் விஜயின் ‘யானை’ மக்களிடம் வரவேற்பு பெற்றதோடு, திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மிகப்பெரிய லாபத்தை ஈட்டிக்கொடுத்ததன் காரணமாக, ‘சினம்’ படத்திற்கும் அத்தகைய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேபோல், சமீபத்தில் வெளியான ‘சினம்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, அருண் விஜயின் சினிமா பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், இப்படத்திற்காக அருண் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் தமிழகம் முழுவதும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார். அப்போது அவரிடம் பேசும் ரசிகர்கள் டிரைலர் மிரட்டலாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். இதன் மூலம் ‘சினம்’ படத்தை வெளியிடுவதற்கு பல திரையரங்குகளில் விருப்பம் தெரிவித்து வருவதால் கோலிவுட்டின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படமாக ‘சினம்’ உருவெடுத்துள்ளது.
மூவி ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.விஜயகுமார் தயாரித்திருக்கும் ‘சினம்’ வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...