Latest News :

வெற்றி மற்றும் ஷிவானி நடிக்கும் ‘இரவு’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியது!
Monday September-12 2022

‘8 தோட்டக்கள்’, ‘ஜீவி’ படங்களின் ஹீரோ வெற்றி மற்றும் பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் நடிக்கும் படம் ‘இரவு’. ‘பக்ரீத்’ படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு இயக்கும் இப்படத்தை எம்10 புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.முருகானந்தம் தயாரிக்கிறார்.

 

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் வெற்றி, இப்படத்தின் மூலம் முதல் முறையாக கோஸ்ட் திரில்லர் டிராமா ஜானர் படத்தில் நடிக்கிறார்.

 

வீடியோ கேம்ஸ் டிசைன் செய்யும் நாயகன் வாழ்வில், அவன் கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்கள், நேரில் வர ஆரம்பிக்கிறது. அதை தொடர்ந்து ஓர் இரவில் நடக்கும் பரபரப்பு சம்பவங்களே, இந்தத் திரைப்படம். பல பேய்க்கதைகள் வந்திருந்தாலும், இப்படம் உணர்வுகளை மையமாக கொண்டு, பரபரப்பான திரைக்கதையில், ஒரு திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது.

 

இப்படத்தில் வெற்றி, ஷிவானி நாராயணன் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம், சேஷு, கல்கி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

ஸ்ரீனிவாஸ் தயாநிதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைக்கிறார். சி.எஸ்.பிரேம் குமார் எடிட்டிங் செய்ய, கே.மதன்குமார் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். ஞானகரவேல், கார்த்திக் நேதா, கருணாகரன் ஆகியோர் பாடல்கள் எழுத, ஃபயர் கார்த்திக் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். பாபா பாஸ்கர் நடன காட்சிகளை வடிவமைக்கிறார்.

 

ஓர் இரவில் நடக்கும் இக்கதை, முழுக்க சென்னை ஈ சி ஆர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து  படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Related News

8516

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery