Latest News :

கோலிவுட்டுக்கு வந்த புதிய தயாரிப்பு நிறுவனம்!
Saturday September-17 2022

கோலிவுட்டில் புதிதாக அடியெடுத்து வைத்துள்ளது மகேந்திரா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம். சினிமா ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படங்களை வழங்குவதை முக்கிய நோக்கமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திரைப்பட நிறுவனத்தின் அலுவலக திறப்பு விழா ஐதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

 

மேலும், இந்நிறுவனம் முதல் திரைப்படமாக சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் ஜானரில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்துள்ளது.  வல்லூரி ஸ்ரீனிவாச ராவ் தயாரிக்கும் இந்த படத்தை சின்ன வெங்கடேஷ் இயக்குகிறார். சாய் கார்த்திக் ஜாடி தமிழில் வழங்குகிறார்.

 

Mahindra Pictres

 

படம் பற்றி தயாரிப்பாளர் வல்லூரி சீனிவாச ராவ் கூறுகையில், “வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்டு சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கதையை தேர்வு செய்துள்ளோம். மேலும்.. இது ஒரு அழகான காதல் படமும் கூட. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறோம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்.” என்றார்.

 

சாய் கார்த்திக் ஜாடி கூறுகையில், “புதிய தோற்றத்தில் இந்தப் படம் இருக்கும் என்று தைரியமாகச் சொல்ல முடியும். ஏனென்றால் கதையில் பல திருப்புமுனைகள் உள்ளன. புதிய இயக்குனர் சின்னாவை பல OTT நிறுவனங்கள் அழைத்தன. ஆனால் அவர் படம் திரையரங்கில் வரவேண்டும் என்ற ஆசை  ஏற்ப இந்தப் படத்தை பெரிய படமாக உருவாக்குகிறோம். அதனால்தான் சொந்த நிறுவனத்தில் இரண்டு மொழிகளில் படமாக்குகிறோம். இதில் இரு மொழி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். இரண்டு மொழிகளிலும் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடுவோம்.” என்றார்.

Related News

8529

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியானது!
Tuesday March-17 2026

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

Recent Gallery