Latest News :

‘ஃபால்’ வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
Saturday September-17 2022

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் புதிதாக வரவிருக்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான  ‘ஃபால்’ (Fall)  வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வெப் சீரிஸில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள்  பலர் நடித்துள்ளனர். நடிகை அஞ்சலி, எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி  நட்சத்திரங்கள் இத்தொடரில் நடித்துள்ளனர். 

 

திவ்யா என்ற இளம் பெண்ணிற்கு தான் தற்கொலைக்கு முயன்ற 24 மணி நேர சம்பவங்கள் மட்டுமே ஞாபகத்தில் உள்ளது. யாரையும் நம்ப முடியாத சூழ்நிலையில் இருக்கும் அவள், உண்மையில் என்ன நடந்தது என்பதையும், தன் நண்பர்கள் உறவினர்கள் பற்றிய உண்மைகளையும் தேடுகிறாள். மேலும், அவளின் மறந்து போன நினைவுகளிலிருந்து முழுமையான நிகழ்வுகளை கண்டுபிடிக்க முயல்கிறாள். 

 

‘ஃபால்’ (Fall) தொடரை இயக்குவதுடன் ஒளிப்பதிவும் செய்கிறார் இயக்குநர் சித்தார்த் ராமசாமி. அஜேஷ் இசையமைக்க, படத்தொகுப்பை கிஷன் C செழியன் கவனிக்கிறார்.

 

‘ஃபால்’ தொடர் ITV company நிறுவனமான Armoza Formats விநியோகம் செய்த, Productions Pixcom Inc நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, மைக்கேல் ஆலன் எழுத்தில், விருது பெற்ற "வெர்டிஜ்" எனும் கனடிய வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும்.

 

Fall

 

 

Related News

8530

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியானது!
Tuesday March-17 2026

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

Recent Gallery