தனுஷ், செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள ‘நானே வருவேன்’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.
வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில், சில தினங்களுக்கு முன் வெளியான 'வீரா சூரா' பாடல் ஏற்கனவே 8 நாட்களில் 8 மில்லியன் பார்வையாளர்கள் எனும் சாதனையை படைத்துள்ள நிலையில், இப்படத்தின் டீசர் சமீபத்தில் தனுஷ் ரசிகர்களின் முன்னிலையில் வெளியானது.
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற டீசர், வெளியான சில நிமிடங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருவதோடு, திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...