Latest News :

தனுஷ் படத்தில் இணைந்த சந்தீப் கிஷன்!
Sunday September-18 2022

தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றதுடன், இதுவரையிலான தமிழ் திரைப்படங்கள் பெற்றிடாத எண்ணிக்கையில், பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. முன்னணி நட்சத்திரம், பிரபல தொழில் நுட்ப கலைஞர்களுடன்  இப்படம் தற்போதே ரசிகர்களிடம்  பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

இந்நிலையில் அடுத்த கட்டமாக ஆவலை இன்னும் கூட்டும் வகையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன் இப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் இணைந்துள்ளார்.

 

தெலுங்குத் திரையுலகில் தனது தொடர்ச்சியான வெற்றிகள் மூலம், முன்னணி பிரபலமாக, வெற்றிகரமான கமர்சியல் நடிகர்களில் ஒருவராகப் புகழ் பெற்றவர்  நடிகர் சந்தீப் கிஷன். தற்போது விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பெரிய பிரபலங்களுடன் இணைந்து நடிக்கும் ‘மைக்கேல்’ படமும் பெரிய  எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திரையுலகில் அறிமுகமான ‘மாநகரம்’ படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ’கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷுடன் அவர் இணைந்து பணியாற்றுவது, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த பிரமாண்ட திரைப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

 

நடிகர் தனுஷின்  திரைப்படங்கள் தெலுங்கு  திரையுலகில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றதில் , அவருக்கு தெலுங்கிலும்  நல்லதொரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது.  தற்போது இந்த அற்புதமான நட்சத்திர நடிகர்களின் கூட்டணியில், ‘கேப்டன் மில்லர்’ தெலுங்கு பார்வையாளர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும்.

 

’கேப்டன் மில்லர்’ படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்குகிறார். செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர். ’ராக்கி’, ’சாணிகாயிதம்’படங்கள் மூலம் புகழ்பெற்ற அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.

 

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்ப்டத்திற்கு மதன் கார்கி வசனம் எழுதுகிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரன் படத்தொகுப்பு எய்ய, டி.ராமலிங்கும் கலையை நிர்மாணிக்கிறார். 

 

1930-40 காலகட்டத்தை பின்னணியாக கொண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படம் குறித்து இன்னும் பல ஆச்சர்யங்களை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் விரைவில் அறிவிக்க உள்ளது.

Related News

8536

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியானது!
Tuesday March-17 2026

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

Recent Gallery