தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் காதல் மற்றும் காமெடி கலந்த கலகலப்பான குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘காபி வித் காதல்’. அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் குஷ்பு சுந்தர் பென்ஸ் மீடியா நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் ஹீரோக்களாக நடித்திருக்கும் இப்படத்தில் மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா சண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பாலராஜ், பேபி விர்த்தி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் சிங்கில் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றது.
‘காபி வித் காதல்’ திரைப்படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு தகவல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நாளை (செப்.26) வெளியாக உள்ளது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...