வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம், ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழில் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் 'சொப்பன சுந்தரி'.
ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
‘லாக்கப்’ படத்தை இயக்கிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்கும் இப்படத்திற்கு பால்முருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். அஜ்மல் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பின்னணி இசையை விஷால் சந்திரசேகர் அமைத்திருக்கிறார்.

டார்க் காமெடி ஜானர் திரைப்படமான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தின் முழு படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இறுதி நாள் படப்பிடிப்பின் போது ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
தற்போது இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கி இருக்கின்றன. விரைவில் டீசர் மற்றும் சிங்கிள் ட்ராக்கை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...
Drumsticks Productions தயாரிப்பில், இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ’ஜோ’ படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் ’ஆண் பாவம் பொல்லாதது’...