Latest News :

இயக்குநர் சுந்தர்.சிக்கு கெளரவ டாக்டர் பட்டம்!
Monday September-26 2022

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாளவிகா சர்மா, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காபி வித் காதல்’. அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கலர்புல்லாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் படத்தின் தயாரிப்பாளரும், புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் கலந்துக்கொண்டு பேசுகையில், “நானும் சுந்தர் சியும் ரிஷி பட சமயத்தில் முதன் முதலாக விமானத்தில் தான் சந்தித்தோம். அப்போது இருந்து நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது. அரண்மனை-3 படத்தை அவரை நம்பி ஒப்படைத்தேன். நல்ல லாபம் கிடைத்தது. இப்போது இரண்டாவது முறையாக ’காபி வித் காதல்’ படத்தையும் சிறப்பாகவே எடுத்துக் கொடுத்திருக்கிறார். அடுத்து நாங்கள் இருவரும் மூன்றாவதாக இணையும் படம் மிகப்பெரிய படமாக இருக்கும். இந்த படத்தில் ரம்பம்பம் பாடலில் குஷ்புவும் ஆடியிருக்கலாம் என்பது என்னுடைய எண்ணம்.

 

இந்த இடத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறேன். இந்த படத்தில் பணியாற்றியுள்ள 200 தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை தரும் விதமாக அனைவருக்குமே இலவச சிகிச்சை கார்டு வழங்க இருக்கிறேன். சாதாரண சிகிச்சை முதல், அறுவை சிகிச்சை வரை இந்த 200 பேரின் குடும்பத்துக்குமே இலவசம்தான்.

 

அதேபோல என்னுடைய கல்லூரியில் படித்துள்ள 4000 மாணவர்களுக்கு அடுத்த மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்வின்போது இயக்குனர் சுந்தர்.சி யின் பன்முகத்தன்மை கொண்ட உழைப்பையும் பணியையும் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறோம்” என்று கூறினார்.

Related News

8551

ரீல் மலிங்காவான பிரபல ஆடை வடிவமைப்பாளர் சத்யா.என்.ஜே!
Tuesday September-26 2023

கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கையை தொடர்ந்து தற்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையும் திரைப்படமாகும் நிலையில் மேலும் பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை திரைப்படமாக்க பலர் முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது...

வைரலாகும் ‘வணங்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
Tuesday September-26 2023

வித்தியாசமான திரைப்படங்கள் மூலம் தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகும் ‘வணங்கான்’ திரைப்படம் பல்வேறு தடைகளை கடந்து தற்போது மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக உருவெடுத்துள்ளது...