இந்திய திரையுலமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பிரமாண்ட திரைப்படமான ‘பொன்னியின் செல்வன் - பாகம் 1’ வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் மிகப்பெரிய பொருட்ச் செலவில் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் சரத்குமார், பிரபு, பார்த்திபன், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பு பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள படக்குழுவினர் சென்னை மட்டும் இன்றி பெங்களூர், மும்பை, ஐதராபாத், டெல்லி என இந்தியா முழுவதும் சுற்று ரசிகர்களை சந்தித்து வருவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, படம் பற்றிய புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கிள் உள்ளது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய ‘பொன்னியின் செல்வன்’ டிக்கெட் முன்பதிவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக சென்னையில் அதிகாலை 4.30 மணி சிறப்பு காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்புல்லாகியுள்ளது.
மேலும், காலை 8 மணி காட்சிகளும் ஹவுஸ்புல்லாகி வருவதால், செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முன்பதிவில் மிகப்பெரிய சாதனையை ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...