சீரியல் நடிகை ஜெயலட்சுமி தனது அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி பலரிடம் பணம் வசூலிப்பதாக, பாடலாசிரியர், நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளருமான சினேகன் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
சினேகனின் புகாருக்கு விளக்கம் அளித்த நடிகை ஜெயலட்சுமி, தன் மீது தவறான புகார் அளித்து தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய சினேகன் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் போலீஷ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஆனால், அவரது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்த நடிகை ஜெயலட்சுமி, எழும்பூர் 13 வது நடுவர் நீதிமன்றத்தில் சினேகன் மீது வழக்கு பதிவு செய்ய மனு தாக்கல் செய்தார்.
மனுவை ஏற்ற நீதிபதி சினேகன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, சிநேகன் மீது பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளருமான சினேகன் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற மற்றும் பழமையான தயாரிப்பு நிறுவனமான ஏ...
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ஜீ 5 - ல் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி வெளியான ’ரேகை’ இணையத் தொடர் ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது...