Latest News :

”மீண்டும் ஃபார்முக்கு வந்து விட்டேன்!” - சரத்குமார் உற்சாகம்
Wednesday September-28 2022

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சத்குமார், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன் சார்பில் சுபாஷ்கரனின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரமான பெரிய பழவேட்டரையர் வேடத்தில் சரத்குமார் மிரட்டியிருக்கிறார்.

 

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் வெளியாக உள்ள நிலையில், நடிகர் சத்குமார் ‘பொன்னியின் செல்வன்’ படம் பற்றிய தனது அனுபவம் மற்றும் தனது மற்ற படங்கள் குறித்து இன்று பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துக்கொண்டார்.

 

இதற்காக சென்னை பிரசாத் லேபில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய நடிகர் சரத்குமார், “பலராலும் பல காலம் முயற்சி செய்த பொன்னியின் செல்வனை, பல கஷ்டத்திற்கு பிறகு மணிரத்னமும், லைகா புரொடக்‌ஷனும் இணைந்து உருவாக்கியுள்ளனர். பல பெரிய நடிகர்களை ஒருங்கிணைத்து இந்த படத்தை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கியுள்ளார்கள். முழு நாவலையும், கதாபாத்திரங்களையும் எடுக்க நினைத்தால் அது பல பாகங்களாக போகும். மணிரத்னம் அதை சரியாக சுருக்கி, ஒரு சிறப்பான திரைப்படமாக உருவாக்கியுள்ளார். பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் பெரிய வீரன், சோழ நாட்டிற்கு கட்டுபட்டவன், நந்தினியின் மனம் புரியாத கணவன் என்ற பல அம்சங்கள் நிறைந்து இருக்கிறது. இந்த படத்திற்கு என்னை தேர்ந்தெடுத்தற்கு நான் நன்றி கூறிகொள்கிறேன். மணிரத்னம் உடன் இணைந்தது பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன். வரலாற்றில் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களில், இந்த படத்தில் நடித்த எங்களை இனிமேல் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். 

 

சோழர்கள் பற்றி தெரியாமல் இருந்தவர்களுக்கு கூட, இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர்களை பற்றி தெரியவரும். சோழர்களுடைய பெருமைகளும், திறமைகளும் பல மக்களுக்கு புரியவரும். இனிவரும் காலங்களில் சோழர்களை பற்றி தெரிந்து கொள்ளும் சூழலை இந்த திரைப்படம் ஏற்படுத்தும். இந்தியாவில் தாஜ்மகாலை பார்க்க வரும் மக்கள், இனி தஞ்சை பெரிய கோவிலையும் வந்து பார்க்க வேண்டும். இந்த படத்திற்கு உறுதுணையாக இருந்த லைகா புரொடக்‌ஷனுக்கும், தயாரித்த மெட்ராஸ் டாக்கீஸ்க்கும் நன்றி.

 

பழுவேட்டரையர் 64 விழுப்புண்களை பெற்ற மாவீரர். பொன்னியின் செல்வன் கதையை படிக்கும்போதே பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிப்பது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த வாய்ப்பை எனக்கு அளித்த டைரக்டர் மணிரத்னத்துக்கு நன்றி. அந்த வேடத்தில் யாரெல்லாம் நடிக்க ஆசைப்பட்டார்கள் என்று தெரியாது. ரஜினிகாந்த் நடிக்க விரும்பியதை பெருமையாக கருதுகிறேன், அவர் நடித்திருந்தால் அந்த பாத்திரத்தை நன்றாகவே செய்திருப்பார். இப்போது நான் வில்லனாக நடிப்பது குறித்து கேட்கிறார்கள், நாயகன், வில்லன், அப்பா, அண்ணன் இதெல்லாம் கதாபாத்திரங்கள் தான். அதில் சிறப்பாக நடிப்பவர்கள் தான் நல்ல நடிகராக இருக்க முடியும்.

 

தற்போது 21 படங்களுக்கு மேல் நடித்து வருகிறேன். நாயகனாகவும், முதன்மை கதாபாத்திரமாகவும், வில்லனாகவும் பல பாத்திரங்களில் நடித்து வருகிறேன். எப்போதும் போல் படத்திற்கும் எனக்கும் உங்கள் ஆதரவை தாருங்கள்.” என்றார்.

 

சோழர்கள் காலத்தில் தான் சாதி பிரிவினை ஏற்பட்டதாக சிலர் கூறுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் கூற மருத்த சரத்குமார், சாதி பிரிவினை என்பது இருக்க கூடாது, நான் அனைவரையும் சமமாக மதிப்பவன், அதனால் தான் எனது கட்சிக்கு சமத்துவ மக்கள் கட்சி என்று பெயர் வைத்திருக்கிறேன், என்றும் கூறினார்.

 

‘பொன்னியின் செல்வன்’ நாவல் கற்பனை கலந்து எழுதப்பட்டது என்பதை கல்கியே சொல்லிவிட்டார். அதனால், அந்த நாவல் குறித்த விவாதங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அதன் ஆராய்ச்சியாளர்களை சந்தித்து கேட்டால் சரியான பதில் கிடைக்கும், என்றவர் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழர்களுக்கு பெருமை தரக்கூடிய படமாக நிச்சயம் இருக்கும், என்றார்.

 

மேலும், சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு, அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறேன், நிச்சயம் அந்த படத்தை எடுப்பேன், என்றும் சரத்குமார் கூறினார்.

Related News

8557

உடல் நலக்குறைவால் காலமான ரசிகர்! - வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி
Wednesday April-24 2024

நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...

அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘உயிர் தமிழுக்கு’ மே 10 ஆம் தேதி வெளியாகிறது!
Wednesday April-24 2024

யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ’ஜெய் ஹனுமான்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
Wednesday April-24 2024

கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...