Latest News :

அறிமுக நடிகர் கிரீட்டி நடிக்கும் ‘ஜூனியர்’! - பிரமாண்டமாக உருவாகிறது
Friday September-30 2022

கன்னட சினிமாவில் தொடர்ந்து பிரமாண்ட படங்களும், இந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் திரைப்படங்களும் வெளியாகி வருவதால், ஒட்டு மொத்த இந்திய திரையுலகின் கவனம் கன்னட சினிமாவின் மீது விழுந்துள்ளது. இதையடுத்து கன்னட சினிமாவில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்பட அறிவிப்பும் கவனம் ஈர்த்து வருகிறது.

 

அந்த வகையில், கன்னட சினிமாவில் ஹிரோவாக அறிமுகமாகிறார் கிரீட்டி. பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளரும், அரசியல்வாதியும், தொழிலதிபருமான ஜனார்த்தன் ரெட்டியின் மகனான கிரீட்டி, அறிமுகமாகும் படத்திற்க்கு ‘ஜூனியர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நாயகன் கிரீட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது முதல் படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

முன்னதாக கிரீட்டி ஹீரோவாக அறிமுகம் ஆவதை பிரமாண்ட விழா மூலம் கொண்டாடினார்கள். இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, “கிரீட்டி நடிகராக அறிமுகமாவதற்கு தன்னுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கியிருக்கிறார். அவர் கடினமாக உழைத்து பெரிய உயரத்தை எட்டுவார்.” என்று பாராட்டினார்.

 

கிரீட்டியின் திரையுலகப் பிரவேசம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றதைப் போல், அவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. தற்போது படக்குழுவினர், அவரது பிறந்தநாளான செப்டம்பர் 29ஆம் தேதி படத்திற்கு ‘ஜுனியர்’ என பெயரிட்டு, அதன் டைட்டில் லுக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

 

ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கி வரும் இந்த திரைப்படத்தில்  நடிகர் கிரீட்டியுடன் வி. ரவிச்சந்திரன்,  ஜெனிலியா ரித்தேஷ் தேஷ் முக், ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ‘பாகுபலி' படப் புகழ் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு, 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ரவீந்தர் கவனிக்க, மெய்சிலிர்க்கும் சண்டைக் காட்சிகளை முன்னணி சண்டை பயிற்சி இயக்குநரான பீட்டர் ஹெய்ன் மேற்கொண்டிருக்கிறார்.

 

தெலுங்கின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வாராஹி ‌ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கும் 15வது திரைப்படத்திற்கு ‘ஜுனியர்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. நடிகர் க்ரீட்டி கதையின் நாயகனாகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகும் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் தயாரிக்கிறார்கள்.

 

Junior

Related News

8559

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery