சென்சார் குழுவினர், சான்றிதழ் வழங்க காலதாமதப்படுத்துவதின் மூலம் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் ரொம்பவே சிரமப்படுவதாக, ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.
’கேக்காமலே கேட்கும்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை இயக்கியிருக்கும் நரேந்திர பாபு, கன்னடத்தில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். தமிழில் இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் நரேந்திர பாபுவின், அப்பா கர்நாடகம், அம்மா மேட்டுப்பாளையமாம். அம்மாவின் தாய் மொழியான தமிழில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது நரேந்திர பாபுவின் நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்த நிலையில், தற்போது ‘கேக்காமலே கேட்கும்’ படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது
இப்படத்தில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நரேந்திர பாபு, “நான் பணிபுரியாமலேயே ஒருவரது படங்களை பார்த்தே இயக்கம் கற்றுக்கொண்டது கே.பாலச்சந்திரம் தான். அவர் தான் எனது மானஷீக குரு. பாக்யராஜ், மணிரத்னம் ஆகியோரது படங்களையும் பார்த்து தான் நான் இயக்குநராகியிருக்கிறேன்.
நீண்ட நாட்களாக தமிழில் ஒரு படம் இயக்க வேண்டும் என்பது எனது ஆசை. தற்போது அது நிறைவேறியிருக்கிறது. கன்னடத்தில் பல வெற்றி படங்களை நான் இயக்கியிருந்தாலும், தமிழில் இயக்க இருக்கும் முதல் படம் அனைத்து ரசிகர்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக, தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாறு இப்படத்தை பேய் படமாக எடுத்திருக்கிறேன்.
மற்ற படங்களை போல ஒரு சாதாரண பேய் படமாக இல்லாமல், இப்படத்தின் கதையை வித்தியாசமான முறையில் கையாள நினைத்தேன். அதன்படி செல்போனை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். ஒருவருக்கு ஒரு போன் கால் வரும், அதில் பேசுபவர் போனுக்கு சொந்தக்காரர் குரலிலேயே பேசுவார், ஒரு குறிப்பிட்ட நேரத்தை சொல்லி, அந்த நேரத்தில் இறந்து விடுவீர்கள் என்று சொல்வார், அவர் சொல்வது போலவும் நடக்கும். இது போன்ற போன் கால் யாரு யாருக்கு வருகிறதோ, அவங்க உயிரிழந்து விடுவார்கள், இதுபோல தான் போனில் பேய் வருவது போல திரைக்கதை அமைத்திருக்கிறேன்.
இதில் ரத்தம் இருக்காது, இரவு நேர காட்சிகள் இருக்காது, 12 மணிக்கு மணி அடிக்காது. ஆனால், சுவாரஸ்யமான கதையாக இருக்கும்.” என்றார்.
தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசுகையில், “சிறு முதலீட்டு படங்கள் தான் இப்போது வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் ‘கேக்காமலே கேக்கும்’ திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும். சிறு முதலீட்டு படங்களுக்கு சென்சார் அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை. ஒரு படத்திற்கு சான்றிதழ் கேட்டு படத்தை பார்க்க அழைத்தால் அவர்கள் காலதாமதம் செய்கிறார்கள். இதை தவிர அவர்களுக்கு வேறு என்ன வேலை இருக்கிறது. சென்சார் குழுவால், தயாரிப்பாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதற்கு எதாவது செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார்.
புதுமுகங்கள் கிரண், வந்தனா ஹீரோ ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தை சி.வி.பிலிம்ஸ் சார்பில் சி.வெங்கடேஷ் தயாரித்துள்ளார். ஜி.சஷிகாந்த், எஸ்.குருராஜா, ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...