Latest News :

இடைவிடாமல் சிரிக்க வைக்கும் இணையத் தொடர் ‘மேட் கம்பெனி’! - ஆஹா ஒடிடி தளத்தில் வெளியானது
Friday September-30 2022

ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் வெளியாகும் பல்வேறு இணைய தொடர்களுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக காமெடி வலைத்தளத் தொடர்கள் என்றாலே ஆஹா ஒடிடி தளத்திற்கு தான் முதல் இடம். அந்த வகையில், பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய இணைய தொடரான ‘மேட் கம்பெனி’ ஆஹா ஒடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

 

இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்தொடரில் பிரசன்னா, கனிகா, எஸ். பி. பி சரண், தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

இடைவிடாமல் சிரித்துக்கொண்டிருக்கும் வகையில் முழுக்க முழுக்க நகைச்சுவையாக உருவாகியுள்ள ‘மேட் கம்பெனி’ இன்று வெளியாவதை தொடர்ந்து, தொடரின் இயக்குநர் மற்றும் நடிகர், நடிகைகள் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

 

இந்த நிகழ்வில் நடிகர் பிரசன்னா பேசுகையில், “நம்ம வாழ்க்கைக்குள்ள மிஸ் பண்ற அல்லது மிஸ் பண்ணிட்மோம்னு நினைக்குற ஒரு கேரக்டர் கூட, நடிகர்கள வரவெச்சி நடிக்க வெச்சா எப்படியிருக்கும் என்கிற ‘மேட்’ ஐடியா தான் இந்த ‘மேட் கம்பெனி’யோட அடித்தளம். ஒவ்வொரு எபிசோடும், ஒவ்வொரு ஜானர்ல இருக்கும். அது எல்லாத்தையும் ஜாலியா.. எண்டர்டெனிங்கா.. பண்ணியிருக்கோம்.  ‘பொன்னியின் செல்வன்’, ‘நானே வருவேன்’ ஆகிய படங்களைப் பார்த்தபிறகு, டைம் கிடைக்கும் போது, ‘ஆஹா’ல இருக்குற, இந்த ‘மேட் கம்பெனி’யோட எட்டு எபிசோடையும் பாருங்க.” என்றார்.

 

Mad Company

 

படத்தின் இயக்குநர் விக்னேஷ் விஜயக்குமார் பேசுகையில், “இந்த படத்தின் கான்செப்ட் என்னவெனில், நாம் நம்முடைய வாழ்க்கையில் யாரையாவது தவறவிட்டிருப்போம். இது போன்ற ஒருவர் நம்முடைய வாழ்க்கையில் வந்தால் நன்றாகயிருக்குமே.. என பல தருணங்களில் நினைப்போம். அதாவது நம்முடைய வீட்டில் உள்ள பாட்டி புலம்புவதைக் கேட்க ஒரு ஆள் வேண்டும் ...என சில விசயங்களை எளிமையாக நினைத்திருப்போம். அது போன்ற விசயங்களை நடத்திக்காட்ட ஒரு நிறுவனம் இருந்தால்... அது தான் மேட் கம்பெனி.

 

திடீரென்று ஒரு நபருக்கு முன் நின்று, ‘நான் தான் உனது அண்ணன்’ என்றால்... அவருக்கு அதிர்ச்சியாக இருக்கும். நம்பவும் மாட்டார்.  அதனால் ஏற்படும் நகைச்சுவையான சம்பவங்களை கொண்டது தான் இந்த வலைத்தளத் தொடர்.

 

நம்மில் பலரும் பல தருணங்களில்.., ‘ஒரு சின்ன ஸாரியை சொல்லியிருந்தால்... போதும். இந்த நிலை ஏற்பட்டிருக்காது’. ..‘ஒரு போன் செய்திருந்தால் போதும்... நிலைமை மாறியிருக்குமே... ’ என எண்ணுவோம்.  இதனை மையப்படுத்தித்தான் இந்த ‘மேட் கம்பெனி’ என்ற வலைத்தள தொடர் உருவாகியிருக்கிறது. இந்த தொடர் எட்டு அத்தியாயங்களாக ‘ஆஹா’வில் செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாகிறது. அனைவரும் பார்த்து ரசித்து, ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்.

 

ஆஹா டிஜிட்டல் தளத்தில் 'கூகுள் குட்டப்பா', 'அம்முச்சி 2', 'சர்க்கார் வித் ஜீவா', 'குத்துக்கு பத்து' என ஏராளமான ஒரிஜினல் நகைச்சுவை படைப்புகள் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

Related News

8562

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

Recent Gallery