‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘நானே வருவேன்’ ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதோடு மட்டும் இன்றி விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவான படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்படம் தனுஷ் ரசிகர்களை மட்டும் இன்றி வெகுஜன ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
’வேலையில்லா பட்டதாரி 2’, ‘அசுரன்’ என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தனுஷ் கூட்டணியின் மூன்றாவது வெற்ரியாக அமைந்துள்ள ‘நானே வருவேன்’ படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ‘நானே வருவேன்’ வெளியான முதல் நாளிலேயே சுமார் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ஒரே நாளில் இவ்வளவு தொகையை வசூலித்திருப்பதாலும், ஊடகங்கள் படத்தை வெகுவாக பாராட்டி இருப்பதாலும் நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் வசூலால் இயக்குநர் செல்வராகவனை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஆள் உயர மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
ஆக, எந்தவித ஆரவாரம் இல்லாமல், மிக அமைதியாக சாதித்துள்ள தனுஷின் ‘நானே வருவேன்’ வசூல் வேட்டையை தொடங்கி விட்டது.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...