‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்திற்கு பிறகு உதயநிதியின் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘இப்படை வெல்லும்’. கெளரவ் இயக்கும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
உதய நிதிக்கு ஜோடியாக மஞ்சுமா மோகன் நடிக்க, இவர்களுடன் சூரி, ராதிகா, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். டி.இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அணைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. சமீபத்தில் தணிக்கை குழுவினருக்கு இப்படம் திரையிட்ட போது, படத்தை பார்த்தவர்கள் எந்த கட்டும் சொல்லாமல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.
விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து படமும் விரைவில் வெளியாக உள்ளது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...