Latest News :

ஹீரோவை தொடர்ந்து யோகி பாபு எடுத்திருக்கும் புதிய அவதாரம்!
Monday October-03 2022

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, ஹீரோவாகவும் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். 

இந்த நிலையில், யோகி பாபு, லட்சுமி மேனன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மலை’ படத்தை தயாரித்திருக்கும் லெமன் லீஃப் கிரியேஷன் ஆர்.கணேஷ் மூர்த்தி, யோகி பாபுவை நாயகனாக வைத்து மற்றொரு படத்தை தயாரிக்கிறார்.

 

இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதோடு மட்டும் இன்றி, கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றையும் யோகி பாபு தான் எழுதியிருக்கிறார். இதில் கதாநாயகியாக சம்ஸ்கிருதி நடிக்கிறார்.  

 

‘தா’, ‘வில் அம்பு’ ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம் இயக்கும் இப்படம் பூஜையுடன் இன்று தொடங்கியது.

 

’மலை’ படத்தை தொடர்ந்து யோகி பாபுவை வைத்து இரண்டாவது படம் தயாரித்து வரும் லெமன்லீஃப் கிரியேஷன், இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மற்றொரு படத்தையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

8572

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

Recent Gallery