அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல், இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படமாக வெளியாகியுள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
படம் வெளியாவதற்கு முன்பாகவே முன்பதிவு மூலம் மிகப்பெரிய ஓபனிங்கை பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ உலகம் முழுவதும் 3 நாட்களில் ரூ.200 கோடியை தாண்டி வசூலித்திருப்பதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் மிகப்பெரிய பொருட்ச் செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படம் ஊடகங்களின் பாராட்டை பெற்றதோடு மட்டும் இன்றி, வயதானவர்களையும் திரையரங்கிற்கு அழைத்து வந்திருக்கிறது.

பெண்கள், சிறுவர்கள் என்று குடும்பம் குடும்பமாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தை பார்த்து கொண்டாடுவது மட்டும் இன்றி, பலர் திரும்ப திரும்ப படத்தை பார்ப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள்.
தற்போது வரை ஒரு வாரத்திற்கு ஹவுஸ் புல்லாக இருப்பதால், படத்தின் வசூல் அடுத்த அடுத்த நாட்களில் அதிகரிக்க கூடும் என்பதோடு, இதற்குமுன்பு வசூல் சாதனை நிகழ்த்திய பல படங்களின் சாதனைகளை ‘பொன்னியின் செல்வன்’ முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...