வம்சி படிபல்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்து வருகிறார்கள். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஜெயசுதா, சங்கீதா கிரிஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தமன்.எஸ் இசையமைக்கிறார். பிரவீன் கே.எல்.படத்தொகுப்பு செய்கிறார்.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘வாரிசு’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையை அடுத்துள்ள எண்ணூரில் நடைபெற்றது வருகிறது. இந்த படப்பிடிப்பு பல ஆயிரம் ஷேர் ஆட்டோக்களை வைத்து காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இதற்காக சென்னை சாலிகிராமம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் அத்தனை ஷேர் ஆட்டோக்களையும் படக்குழு வாடகைக்கு எடுத்திருக்கிறார்களாம். மேலும், விஜய் படத்தின் படப்பிடிப்பு என்பதால், பல ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஆட்டோக்களுடன் படப்பிடிப்பில் பங்கேற்க ஆர்வம் காட்டினார்களாம்.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...