Latest News :

‘ப்ளாக் பாந்தர்- வகாண்டா ஃபார்எவர்’ படத்தின் டிரைலர் வெளியானது
Wednesday October-05 2022

ரையான் கூக்லர் இயக்கத்தில், கெவின் ஃபைகீ மற்றும் நேட் மூர் தயாரிப்பில், மார்வெல் ஸ்டுடியோஸ் வழங்கும் ’ப்ளாக் பாந்தர்: வகாண்டா ஃபார்எவர்’ உலகம் மீண்டும் வகாண்டா ராஜ்ஜியத்திற்கு இம்முறை புதிய சவால்களுடன் செல்கிறது. இப்போது வெளியாகியுள்ள இந்த புதிய முன்னோட்ட காட்சிகள் மற்றும் போஸ்டர் ஆக்‌ஷன் காட்சிகள் நிரம்பி, கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் தலோகன் என்ற உலகத்தை கடந்து செல்கிறது.  

 

இந்தப் படத்தில் மன்னன் ச்சாலாவின் மரணத்தை அடுத்து உலக வல்லரசுகளின் தலையீட்டில் இருந்து தங்கள் நாட்டைப் பாதுகாக்க குயின் ரமோன்ட்டா (ஆஞ்சலா பாஷட்),  ஷூரி (லடிஷா ரைட்), எம்பாக்கூ (வின்ஸ்டன் ட்யூக்), ஓஹ்கோயே (டானே குரீரா), மற்றும் டோரா மிலாச்சே (ஃப்ளோரன்ஸ் கசூம்பா) ஆகியோர் போராடுகிறார்கள். 

 

அந்த வகையில் வகாண்டாக்கள் தங்களுடைய அடுத்த அத்தியாயத்தைத் துவக்க, டாக் நைக்கா (லுபிடா நியூங்) மற்றும் எவரெட் ரோஸ் (மார்டின் ஃப்ரீமேன்) ஆகியோரது உதவியுடன் கதையின் நாயகர்கள் ஒன்றிணைந்து வாகாண்டா ராஜ்ஜியத்திற்கான புதிய பாதையை உருவாக்க வேண்டும்.  

 

Black Panther

 

இதில் தலோகன் உலகத்தின் அரசனாக நேமரை (டெனோச் ஹோயர்தா) அறிமுகப்படுத்துகிறோம். மேலும் டாமினிக் தோர்ன், மக்கேலா கோல், மேபெல் கடோனா மற்றும் அலெக்ஸ் லிவினாலி ஆகியோரும் படத்தில் மற்ற நட்சத்திரங்களாக உள்ளனர். 

 

’ப்ளாக் பாந்தர்: வகாண்டா ஃபார்எவர்’ வரும் நவம்பர் 11 ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது.

 

Related News

8577

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery