Latest News :

’சர்தார்’ மூலம் ஹாட்ரிக் அடிக்கப்போகும் கார்த்தி!
Thursday October-06 2022

வித்தியாசமான களங்களையும், கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் கார்த்தியின் நடிப்பில் வெளியான ‘விருமன்’ மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ இந்தியா முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

 

வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவருடைய மனதிலும் இடம் பிடித்த கார்த்தி தொடர்ந்து இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்திருக்கும் நிலையில், ‘சர்தார்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் அடிக்க ரெடியாகி விட்டார்.

 

‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடித்திருக்கும் ‘சர்தார்’ படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லட்சுமன்குமார் மிகப்பெரிய பொருட்ச் செலவில் பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார். 

 

மேலும், கடந்த மாதம் வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் டீசர் படத்தின் மீதான் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்திருப்பதோடு, உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை வெளியிடும் அறிவிப்பு வெளியானதால் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

தீபாவளியன்று வெளியாக உள்ள ‘சர்தார்’ படம் குறித்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன் கூறுகையில், “’சர்தார்’ என்றால் பெர்சிய மொழியில் படைத்தலைவன் என்று பொருள். 'சர்தார்' ஒரு ஸ்பை த்ரில்லர் கதை. 

 

உளவாளி என்பது  நமக்கு தெரிந்ததெல்லாம் நாடுவிட்டு நாடு நடக்கிறது தான். ஆனால் நம்மைச் சுற்றியே அவ்வளவு உளவாளிகள் இருக்காங்க. உளவுங்கிறது நாட்டோட ராணுவ ரகசியம் தெரிஞ்சுக்கிற வேலை மட்டுமில்லை. நமக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு டீக்கடை பையனிலிருந்து கூட அதை ஆரம்பிக்கலாம். ரொம்ப சிம்பிளான இடத்திலிருந்து தொடங்கி மிகப்பெரிய இடம் நோக்கி இன்டர்நேஷனல் வரைக்கும் உளவு போகுது. இதில் உலக அரசியலும் இருக்குது. இது சாமானியனை எப்படி பாதிக்கிறது என்பது பற்றிய கதை இது. 

 

Karthi Sardar

 

பாரதியார் கவிதை போல... 'நீ என்பது யார்? உடலா, உயிரா, செயலா'..நம்ம அடையாளம் , செய்கிற செயல் தான். உளவாளிகளும் அப்படித்தான்.  அலெக்ஸாண்டர், ஹிட்லர் உட்பட பெரும்பாலானோர் வரலாற்றின் முக்கியமான சாதனைகளுக்கு பின்னாடி முக்கிய காரணமாக இருப்பது உளவாளிகள் தான்.  

 

கார்த்தி, 'சிறுத்தை'யில் ரத்னவேல் பாண்டியனாக விரைப்பும், ஜாலியாக இரண்டிலும் வந்தார். இதில் ஜாலியான போலீஸ்காரன், அலப்பறையா இருக்கும். வயதான அப்பாவாக கார்த்தி  கன கச்சிதம். இளமை, வயதானவர் இருவருக்கும் பெரிய அளவில்  வித்தியாசம் இருக்கும். 

 

மூணு மணி மேக்கப், அந்த மேக்கப் போட்டு டயலாக் பேசி நடிக்கவே கஷ்டம். இதில் கூடவே ஆக்ஷன் வேறு இருக்கும். அது ரொம்பவே கஷ்டம். இப்படி மெனக்கிட்டு கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார் கார்த்தி. ” என்றார்.

 

ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன்னு ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருக்கும் இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு லைலா முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

Related News

8578

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery