Latest News :

கிராமத்து பின்னணியில் உருவாகும் சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர் ‘எமகாதகி’!
Monday October-10 2022

திரைத்துறையில் தொழில்நுட்ப கலைஞர்களாக,  கலையை நேசிக்கும் உண்மையான காதலர்களாக வலம் வரும் நண்பர்கள் நடிகர் வெங்கட் ராகுல், ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘எமகாதகி’. கிராமத்து பின்னணியில் உருவாகும் சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்தை பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்குகிறார்.

 

ஒரு சந்திப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ்  ஜெயசீலன் கதையினை கேட்ட நண்பர்களுக்கு மிகவும் பிடித்துப்போகவே, இப்படத்தை தாங்களே இணைந்து தயாரிக்க முன்வந்துள்ளனர். சினிமா மீதான உன்னத காதலில், ஒரு தரமான படத்தை தரும் எண்ணத்தில், இப்படத்தை தயாரித்துள்ளனர். 

 

புதுமுகங்களால் உருவாகும் இப்படம் எந்தவித சமரசமுமின்றி முழுக்க முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகனை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்லும் தரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. 

 

ரூபா கொடுவயூர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ஆர்..ராஜூ, சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி ஆகியோருடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். 

 

நைசாட் மீடியா ஒர்க்ஸ் & சாரங் பிரதர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார்.

 

Yamakaathagi

 

தஞ்சாவூரை சுற்றிய கிராமங்களில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் படத்தின் டீசர், டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகளை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Related News

8579

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

Recent Gallery