விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்றதன் மூலம் பலர் மக்களிடம் பிரபலமாகியுள்ளதோடு, திரைத்துறையினரின் பார்வைக்கும் பட்டுள்ளனர். இதனால், பலருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
மார்கெட்டே இல்லாமல் இருந்த ஓவியா, தற்போது கோடிகளில் சம்பளம் கேட்கிறார். அதேபோல் பிந்து மாதவிக்கும் பட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ள நிலையில், மாடலிங் செய்துக் கொண்டிருந்த ஆரவுக்கும் பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறதாம்.
இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த மாடல் அழகியான ரைசாவுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தாலும், அவர் அதற்கு நோ சொல்லிவிடுகிறாராம்.
தற்போது விளம்பர படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ரைசா, திரைப்படத்தில் நடித்தால், முன்னணி இயக்குநர் மற்றும் முன்னணி ஹீரோ உள்ள படங்களின் மூலமாக மட்டுமே அறிமுகமாக வேண்டும் என்ற கொள்கையோடு இருப்பதால், தனக்கு வரும் பட வாய்ப்புகளை நிராகரித்து வருகிறாராம்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...