Latest News :

விஜய் சேதுபதி வெளியிட்ட ’அஜினோமோட்டோ’பட முதல் பார்வை!
Thursday October-06 2022

அறிமுக இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'அஜினோமோட்டோ'.  இதில் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காயத்ரி ரேமா நடித்திருக்கிறார். இவர்களுடன் அனந்த் நாக், பிரான்சு திவாரி, ஆராத்யா, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

 

கே. கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. எம். உதயகுமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை எம். எஸ். ஸ்ரீநாத் மேற்கொண்டிருக்கிறார். கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தத்தாத்ரே ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவராஜ் பன்னீர்செல்வம் மற்றும் ஆ. தமிழ் செல்வன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

 

படத்தை பற்றி இயக்குநர் கூறுகையில், “’அஜினோமோட்டோ’ என்பது சுவையை அதிகரிக்கக்கூடியது. ஆனால் அது மனிதர்களை மெதுவாக கொல்லும் விஷம். இதனை மையப்படுத்தி ‘அஜினோமோட்டோ’ படத்தின் கதை தயாராகியிருக்கிறது. கதையில் நடைபெறும் சில சம்பவங்கள், கதாபாத்திரங்களுக்கு, அந்த சமயத்தில் நல்லதாகத் தோன்றும். ஆனால் பிறகு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதன் பின் விளைவுகளும் கடுமையாக இருக்கும். அது என்ன? என்பதை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லி இருப்பதே இப்படத்தின் திரைக்கதை. மேலும் இது போன்ற அனுபவங்களை, கழுகு கண் பார்வையுடனான திரைக்கதையாக விவரிக்கும் போது, பார்வையாளர்களுக்கு புது வகையான அனுபவம் கிடைக்கும்.” என்றார்.

 

இந்த நிலையில், ‘அஜினோமோட்டோ’ படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி, தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார். மக்களை வெகுவாக கவர்ந்திருக்கும் முதல் பார்வை போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Related News

8580

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery