Latest News :

அதிநவீன ஸ்டுடியோ தொடங்கிய ஜிவி பிரகாஷின் மனைவி!
Thursday October-06 2022

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமாரின், மனைவியும் பிரபல பாடகியுமான சைந்தவி, சென்னையில் அதிநவீன ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியுள்ளார்.

 

சவுண்ட் ரைட் (Sound Right) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஸ்டுடியோ, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வீரபத்திரன் தெரிவில் அமைந்துள்ளது.

 

இந்த புதிய ஸ்டுடியோ திறப்பு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்கள்.

 

மேலும், பிரபல பாடகர்கள் ஸ்ரீநிவாஸ்,ஹரி சரண்,தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன்,  இயக்குநர் ஏ.எல்.விஜய்  சூப்பர் சிங்கர்ஸ் பிரபலங்கள் ஷிவாங்கி, சத்ய பிரகாஷ், ஹரிப்ரியா, பிரியங்கா, ஆதித்யா,, உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.

 

’சவுண்ட்ஸ் ரைட்’  ஸ்டுடியோ குறித்துப் பேசிய பாடகி சைந்தவி, “இந்த ரெகார்டிங் ஸ்டுடியோவைத் துவக்கவேண்டும் என்பது எனது சில ஆண்டுகால கனவு என்றுதான் சொல்லவேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே துவங்க முயன்றபோது, ஒரு பொல்லாத பூனையைப்போல் ,கொரோனா குறுக்கே வந்துவிட்டது.  இறுதியில், ஒருவழியாக அந்தக் கனவு இன்று நிஜத்திற்குள் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்திருப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி.                                                                   

இந்த ஸ்டுடியோவில்  ஏ’ பிரிவில் டால்ஃபி அட்மாஸ் HE, ஸ்டேட் ஆஃப் த ஆர்ட் ரெகார்டிங் வசதியும் மற்றும் பல்வேறு நவீன  வடிவ மிக்ஸிங் மற்றும் மாஸ்டரிங் வசதி உள்ளது.

 

ஸ்டுடியோ பி’ பிரிவில்  ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் ஸ்டீரியோ ரெக்கார்டிங் மற்றும் ஏடிஆர் வசதிகள் (டப்பிங்) ஜாம் பேட் - செட் அப்பில் ஒரே நேரத்தில்  16 இசைக்கலைஞர்கள் / பாடகர்கள்  இயங்கும் சுதந்திரமான வெளியும் உள்ளது.

 

’செவிக்கு உணவு இல்லாத போது  சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்ற வள்ளுவனின் வாக்குக்குக்கேற்ப, இசைப்பணிகளுக்கு நடுவே சற்றே ரிலாக்ஸ் செய்து கொள்ள ஸ்டியோவின் ஒரு பகுதியில் லவுஞ்ச் ஒன்றும் உள்ளது” என்றார்.

Related News

8581

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery