Latest News :

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘வீரன்’ படப்பிடிபு நிறைவடைந்தது!
Tuesday October-11 2022

ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் படம் ‘வீரன்’. தென்னிந்திய சினிமாவில் பல வெற்றிப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டது.

 

திரையரங்க வெளியீடு மற்றும் ஒடிடி என இரு தளங்களிலும் தொடர்ச்சியாக கதைகளை தயாரித்து வழங்கும் மிகச் சில தயாரிப்பு நிறுவங்களில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் முக்கியமானது. அந்த வகையில், சத்யஜோதி ஃபிலிம்ஸ்ஸின் அடுத்த படைப்பாக, ஹிப்ஹாப் தமிழா கதாநாயகனாக நடித்துள்ள 'வீரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது, போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு சத்யஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்த 'சிவக்குமாரின் சபதம்' மற்றும் 'அன்பறிவு' ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்த இந்தப் படங்கள் மூலம் இப்பொழுது மீண்டும் இணைந்துள்ள சத்யஜோதி-ஹிப்ஹாப் தழிழா இணைக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

ஃபேண்டசி காமெடி ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படமாக 'வீரன்' அமைந்துள்ளது. இதில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும், போஸ் வெங்கட், முனீஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

 

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு தீபக் டி.மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பு செய்ய, என்.கே.ராகுல் கலையை நிர்மாணித்துள்ளார். மகேஷ் மாத்யூ சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

 

தற்போது படத்தின் பின்னணி வேலைகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை, டீசர், டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் படத்தின் வெளியீட்டு தேதி ஆகியவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Related News

8588

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

Recent Gallery