விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ல ‘மெர்சல்’ படத்தின் தலைப்பு, ரிலீஸில் சிக்கல் என்று பலவிதமான பிரச்சினைகளை சந்தித்து வந்தாலும், பல சாதனைகளையும், பெருமைகளையும் பெற்று வருகிறது.
டிவிட்டர் எமோஜி, டைடில் டிரேட் மார்க் மற்றும் டீசர் அதிக லைக்குகள், டிரைலரை இரண்டு கோடிக்கும் அதிகமானோர் பார்த்தது, என்று தென்னிந்திய திரைப்படங்கள் எவையும் செய்யாத சாதனைகளை செய்து வரும் ‘மெர்சல்’ மேலும் ஒரு பெருமையாக, பிரான்ஸ் நாட்டில் தலைநகர் பாரிஸில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் (Grand Rex) திரையரங்கில் வெளியாக உள்ளது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கமான கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் ஒரு படம் வெளியாவது என்றால், அப்படம் பெருமை மிக்க படமாக கருதப்படுகிறது.
இதற்கு முன்பாக ரஜினிகாந்தின் கபாலி, பாகுபலி ஆகிய தென்னிந்திய படங்கள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், தற்போது விஜயின் ‘மெர்சல்’ படமும் அப்பெருமையை பெற்றுள்ளது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...