Latest News :

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை - அடுத்தக்கட்ட அரசியல் நகர்வில் கமல்!
Wednesday October-04 2017

விரைவில் அரசியலுக்கு வர உள்ள நடிகர் கமல்ஹாசன், ரஜினி போல சொல்லாமல் செயலில் இறங்கியுள்ளதால், அவருக்கு திரைத்துறையினர் பலர் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், இன்று சற்று நேரத்திற்கு முன்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இம்மாதம் இறுதியில் அல்லது நவம்பர் மாதத்தில் தனது அரசியல் கட்சி குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட உள்ள கமல்ஹாசன், அதற்காக தான் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 

ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களை கமல்ஹாசன் சந்திப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News

860

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

தென்னிந்தியாவின் முதல் பான் இந்தியா இசை ஆல்பம் ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)!
Thursday April-02 2026

தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)...

Recent Gallery