Latest News :

ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஸ்ருதி ஹாசன்!
Saturday October-22 2022

நடிப்பு மற்றும் இசை என இரண்டு துறைகளிலும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருக்கும் ஸ்ருதி ஹாசன், தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் நாயகியாக அறிமுகமாகிறார். 

 

எமிலி கார்ல்டன் எழுதி, டாப்னே ஷ்மோன் இயக்கத்தில், ஃபிங்கர்பிரிண்ட் பிலிம்ஸ் மற்றும் அர்கோனாட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் ‘தி ஐ’ என்னும் ஹாலிவுட் படத்தில் ஸ்ருதி ஹாசன் கதையின் நாயகியாக நடிக்கிறார்.

 

'டிரெட்ஸ்டோன்' எனும் ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரின் முக்கிய வேடத்தில் நடித்து, சர்வதேச அளவில் அறிமுகமான ஸ்ருதி ஹாசன், தற்போது திரைப்பட தேர்வில் கவனம் செலுத்தி வருவதோடு, சர்வதேச அளவிலான சினிமாவிலும் ஈடுபட்டு வருகிறார்.

 

இவர் தற்போது நடித்து வரும் 'தி ஐ' எனும் ஹாலிவுட் திரைப்படம் உளவியல் திரில்லர் ஜானரில் உருவாகும் திரைப்படம். கதைப்படி ஒரு விதவை பெண், தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு அவருடைய சாம்பலை கரைப்பதற்காக கிரேக்க தீவுக்கு பயணிக்கிறார். அதன் போது ஏற்படும் உளவியல் சார்ந்த திகில் திருப்பங்களும், சம்பவங்களும் தான் படத்தின் திரைக்கதை. இந்தத் திரைப்படத்தில் கதையின் நாயகியான ஸ்ருதிஹாசனுடன் 'தி லாஸ்ட் கிங்டம்' மற்றும் 'ஒன் டே' ஆகிய படங்களில் நடித்த பிரபல நடிகர் மார்க் ரௌலி, 'ட்ரூ ஹாரர்' படப் புகழ் நடிகை அன்னா சவ்வா, 'தி டச்சஸ்' பட புகழ் நடிகை லிண்டா மார்லோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படம் குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் கூறுகையில், “இசையாலும், சினிமா எனும் காட்சி ஊடகத்தின் மூலமாகவும் கதைகளை பகிர்ந்து கொள்வது என்பது என்னுடைய கனவு. இந்த கனவினை தற்போது சர்வதேச அளவில் விரிவுப்படுத்தி இருக்கிறேன். 'தி ஐ' போன்ற அற்புதமான படைப்பில் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திறமையான பெண்மணிகளால் வழி நடத்தப்படும் அணி என்பது இதன் கூடுதல் சிறப்பு. 'தி ஐ' ஒரு அழகான கதை. இதனை மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.” என்றார்.

 

படத்தைப் பற்றி தயாரிப்பாளர் மெலனி டிக்ஸ் பேசுகையில், “இயக்குநர் டாப்னே ஷ்மோன் மற்றும் திரைக்கதை ஆசிரியர் எமிலி கார்ல்டன் ஆகியோரின் கூட்டணியில் அற்புதமான படைப்பை உருவாக்குகிறோம். 'தி ஐ' நான்காண்டு கால உழைப்பில் உருவானது. எங்களுடைய குழுவில் திறமைசாலிகள் அதிகம் உள்ளனர். மேலும் முழுமையான ஒத்துழைப்பை அளிக்கும் பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் குழுவும் உள்ளது. எங்களுடைய இந்த படைப்பு அசாதாரணமானது. அத்துடன் எங்களின் இலட்சியத்தை எட்டும் உற்சாகத்தையும் பெற்றிருக்கிறோம்.” என்றார்.

 

இதனிடையே WWF எனப்படும் (World Wildlife Fund for Nature) வனவிலங்குகளை இயற்கையாக பாதுகாப்பதற்கான நிதியம் எனும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பின் இந்திய பிராந்தியத்திற்கான விளம்பர தூதுவராக நடிகை ஸ்ருதிஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிறுவனம் உலக அளவில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றுக்கு ஏற்ப செயல்படுவதற்கு ஏற்ற வகையில் நிறுவனங்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் 2009 ஆம் ஆண்டு முதல் 26 நாடுகளில் 1500 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளில் ஆலோசனைகளை வழங்கி இருக்கிறது. இந்த திரைப்படத்திலும் பசுமையான இயற்கை சூழல்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் படப்பிடிப்பு நடத்துவது குறித்த ஆலோசனையை வழங்கியிருக்கிறது. இதற்காக ஸ்ருதிஹாசனின் பங்களிப்பு அதிகம் என இந்த குழுவினர் பாராட்டு தெரிவித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

8609

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

Recent Gallery