நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில், அவரது அண்ணன் மகளும், பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியும், தேசிய விருது பெற்ற நடிகையுமான சுஹாசினி அரசியலுக்கு வரப்போகிறார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நடிகை சுஹாசினியிடம், திரைத்துறையில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வர ஆர்வம் காட்டுவதில்லையே ஏன்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சுஹாசினி, ”ஜெயலலிதா ஆட்சிக்கு கீழ் குடிமக்களாய் இவ்வளவு நாள் இருந்துவிட்டு திரைப்படத் துறையில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வருவதில்லையா? என கேட்பது மோசமான கேள்வி.
கம்ஹாசனும், ரஜினிகாந்தும் மட்டும் தான் அரசியலுக்கு வர வேண்டுமா? ஏன் ராதிகாவும், ரேவதியும், பூர்ணிமாவும், நதியாவும், நானும் தான் அரசியலுக்கு வரலாம். இது அனைத்துமே மக்களிடம் தான் உள்ளது. மக்கள் விரும்பினால் நானும் அரசியலுக்கு வர ரெடியாகத்தான் இருக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...
தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)...