பா.இரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘தங்கலான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா, நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
சியான் விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன், அன்பு துரை உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஏ.கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். தமிழ் பிரபா இணை கதாசிரியராக பணியாற்ற, கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி கையாள, படத்தொகுப்பு பணிகளை ஆர். கே. செல்வா கவனிக்கிறார். சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம் அமைக்கிறார்.
கோலார் தங்க வயலைக் கதைக்களப் பின்னணியாகக் கொண்டு, ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இப்படத்தின் தலைப்பு அறிவிப்போடு வெளியிடப்பட்டிருக்கும் காணொளி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. சீயான் விக்ரம் ரசிகர்களுக்கு, அவர் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு, தீபாவளி விருந்தாக வெளியாகியிருப்பதால் உற்சாகமடைந்து இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...