Latest News :

நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய தயாரிப்பாளர் தாணு
Friday October-28 2022

இந்திய திரையுலகின் முக்கியமான நபராக வலம் வரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான கலைப்புலி எஸ்.தானு, திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதோடு, ஏழைகளின் மருத்துவம் மற்றும் படிப்பு செலவுக்கும் பல உதவிகளை செய்து வருகிறார்.

 

இந்த நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 33 வயது பெண்ணுக்கு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

 

கணவனை இழந்த அந்தப்பெண், கடந்த இரண்டு வருடங்களாக  இடைநிலை நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.   இது அவரது நுரையீரலில் காயங்களை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார். மேலும் தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தில் (TRANSTAN) பதிவும் செய்யப்பட்டு இருக்கிறார்.

 

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது  வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில், நோயாளியின் மருத்துவ சிகிச்சைக்காக அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார்.  சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி மற்றும் காவேரி மருத்துவமனையின் மனநல மருத்துவர் யாமினி கண்ணப்பன் ஆகியோர், நோயாளியின் குடும்பத்தினர் சார்பாக இந்த தொகையை பெற்றுக்கொண்டதோடு, அவரது உன்னத செயலுக்கு நன்றியும் தெரிவித்தனர். 

 

காவேரி மருத்துவமனை இந்த மாற்று அறுவை சிகிச்சைக்கான மொத்த செலவை மானியமாக வழங்கியுள்ளதுடன் மேலும் பல்வேறு நன்கொடையாளர்களிடமிருந்து நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளது.

Related News

8622

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery