Latest News :

லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்கும் ரஜினிகாந்த்!
Saturday October-29 2022

இந்திய திரையுலகில் முன்னனி தயாரிப்பு நிறுவனமாக லைகா புரொடக்‌ஷன்ஸ் உள்ளது. தமிழ் திரையுலக ஜாம்பவான்களின் கனவான ’பொன்னியின் செல்வன்’ நாவலை வெள்ளித்திரையில் திரைப்படமாக வெளிக்கொண்டு வந்த பெருமை லைகா நிறுவனத்தையே சேரும்.

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில் கடந்த மாதம் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ தற்போதும் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதோடு, இரண்டாம் பாகத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

‘பொன்னியின் செல்வன்’ வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதோடு, மேலும் பல பிரமாண்ட படங்களை தயாரிக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது.

 

இந்த நிலையில், ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இது குறித்த அறிவிப்பை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டது.

 

மேலும், நடிகர் ரஜினிகாந்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவன உரிமையாளர் சுபாஷ்கரன், தலைமை நிர்வாகி தமிழ் குமரன் ஆகியோர் நேரில் சந்தித்துள்ளனர்.

 

தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அப்படத்திற்கு பிறகு லைகா தயாரிப்பில் உருவாகும் படங்களில் நடிக்க உள்ளார். முதல் படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5 ஆம் தேதி பிரமாண்டமான முறையில் நடத்த லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Related News

8626

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

Recent Gallery