Latest News :

அஜித் படத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!
Sunday October-30 2022

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது படம் ‘துணிவு’. பேவீவ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரக்கனி, ஜி.எம்.குமார், ஜான் கொக்கேன், வெற்றி கிரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

 

வங்கி கொள்ளையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தின் தலைப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அண்ணாசலையில் நடைபெற்றது. அதில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்படுவதாக  தகவல் வெளியானதால் மக்கள் கூட்டம் குவிந்தது. பிறகு அஜித்திற்கு பதில் வேறு ஒருவர் டூப் போட்டு படப்பிடிப்பில் பங்கேற உண்மை தெரிய வந்தது.

 

படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள உள்ள நிலையில், பின்னணி வேலைகளை வேகமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், படத்தை பொங்கல் வெளியீடாக  வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 

இந்த நிலையில், ‘துணிவு’ படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‘விக்ரம்’ உள்ளிட்ட மிகப்பெரிய வசூல் திரைப்படங்களை வெளியிட்டு வரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ‘துணிவு’ படத்தை வெளியிட இருப்பதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

 

Thunivu

Related News

8628

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

Recent Gallery