Latest News :

ஹீரோவாக களம் இறங்கும் ’ஜெய்பீம்’ மணிகண்டன்!
Thursday November-03 2022

நடிகர், வசனம் மற்றும் திரைக்கதையாசிரியராக வலம் வரும் மணிகண்டன் ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் தனது வசனம் மூலம் கவனம் ஈர்த்ததோடு, ‘காலா’, ‘சில்லுக்கருப்பட்டி’ ஆகிய படங்களில் நடிகராக கவனம் பெற்றார். இதையடுத்து ‘ஜெய் பீம்’ படத்தில் முக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டு பெற்றவர், நடிகராக பல விருதுகளையும் வாங்கினார்.

 

இந்த நிலையில், மணிகண்டன் முதல் முறையாக சோலோ ஹீரோவாக களம் இறங்குகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசிலியான் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

 

Manikandan

 

மணிகண்டன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் மீதா ரகுநாத் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள்  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

படத்தின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் ஆக இயக்குநர் எஸ். பி. சக்திவேல் பணிபுரிந்துள்ளார். மேலும் படத்தின் ஒளிப்பதிவை ஜெயந்த் சேதுமாதவன், படத்தொகுப்பை பரத் விக்ரமன், கலை இயக்கத்தை ஸ்ரீகாந்த் ஆகியோர் மேற்கொள்கின்றனர். 

 

இன்று பெரும்பாலானோர் அவதிப்படும் 'குறட்டை' பிரச்சனையை மையமாக வைத்து நகைச்சுவையுடன் இணைந்த ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. 

 

Manikandan Movie

 

தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை விரைவில் வெளியாக உள்ளது.

Related News

8634

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery