Latest News :

நடிகை சமந்தாவை பாராட்டும் ஹாலிவுட் சண்டைப்பயிற்சியாளர்!
Thursday November-03 2022

கதையின் நாயகியாக பல படங்களில் நடித்து வரும் சமந்தா, ஆக்‌ஷன் கதைகளில் நடிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், அவரது நடிப்பில் உருவாகும் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘யசோதா’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

ஹரி - ஹரிஷ் இயக்கியிருக்கும் இப்படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் கீழ் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். 

 

இப்படம் குறித்து வெளியான ஒவ்வொரு தகவல்களும் படத்தின் மீதா எதிர்பார்ப்பை அதிகரித்து வந்த நிலையில், சமீபத்தில் வெளியான டிரைலர் மற்றும் அதில் இடம் பெற்ற ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும், படத்தின் சண்டைக்காட்சிகள் அனைத்தும் பாராட்டும்படியு இருக்கும் என்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது, என்று பலர் கருத்து கூறி வருவதோடு, படத்திற்கு சண்டைப்பயிற்சி மேற்கொண்டுள்ள யானிக் பென்னை பாராட்டி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், படத்தின் சண்டைக்காட்சிக்கு கிடைத்து வரும் பாராட்டால் மகிழ்ச்சியடைந்திருக்கும் சண்டைப்பயிற்சி இயக்குநர் யானிக் பென், இதற்கு காரணம் சமந்தாவின் முழுமையான அர்ப்பணிப்பும், கடுமையான உழைப்பும் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

 

ஐகிடோ, கிக் பாக்ஸிங், ஜீத் குனே டோ, ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் மணல் பயிற்சியில் நிபுணத்துவம் பெற்றவரான யானிக் பென் புகழ்பெற்ற 40-க்கும் மேற்பட்ட தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். 

 

‘ட்ரான்ஸ்போர்ட்டர் 3’, கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்செப்ஷன்’, ‘டன்கிர்க்’, ஷாருக்கானின் ‘ரயீஸ்’, சல்மான் கானின் ‘டைகர் சிந்தா ஹை’, பவன் கல்யாணின் ‘அத்தாரிண்டிகி தரேதி’, மகேஷ் பாபுவின் ’1- நேனோக்கடைன்’, அல்ல் அர்ஜூனின் ‘பத்ரிநாத்’, சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ மற்றும் பல படங்களில் பணிபுரிந்துள்ள யானிக் பென், ஏற்கனவே சமந்தாவுடன் ‘தி ஃபேமிலி மேன்2’ வெப் சீரிஸில் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

8635

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery